அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்க முனையும் மக்கள் விரோத பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தில்!

iron-rod-police
மகிந்த குடும்ப கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுவித்து நல்லாட்சியை உறுதி செய்யப்போவதாக வாக்குறுதி வழங்கி மைத்திரி மற்றும் ரணிலின் கூட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. வாக்கு போட்ட மக்களும் பெரும் நம்பிக்கையுடன் தான் ஆரம்பத்தில் இருந்தனர். ஆனால் ஒரு வருடத்திலேயே இது களவாணிகளின் கூட்டு என்பது தெளிவாகியது.
அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களிற்கு நியாயமான தீர்வு, மாணவர்களின் போராட்ட கோரிக்கைகளிற்கு தீர்வு என பல வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினர். மகிந்த ஆடசியில் மூச்சு கூட விட முடியாது இருந்த மக்கள்; மாற்றம் வரும் என நம்பி மைத்திரி – ரணில் கூட்டத்தை ஆட்சியில் அமர்த்தினர். கொடுத்த வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவே இன்னமும் இருக்கின்றன.
ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களின் திட்டங்களை சிரம் மேற்கொண்டு செவ்வனே செயற்படுத்துகின்றனர். வாக்கு போட்ட மக்கள் தமது கோரிக்கைகள் குறித்து போராட்டங்களை நடாத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலவசமாக கிடைத்து கொண்டிருக்கும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை உலக வங்கி மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கங்களிற்காக தனியார் மயப்படுத்தும் நவதாராளவாத திட்டத்தை இன்றைய ஆட்சியாளர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக முன்னெடுக்க முனைகின்றனர். பல தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க நீண்டகால குறைந்த குத்தகைக்கு நிலம் உட்பட பல வளங்களை தாரை வார்க்கின்றனர்.
இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை பாதுகாக்கும் பொருட்டு மாணவர் – மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு ஆட்சியாளர்களின் பாதகமான திட்டங்களிற்கு நாடு தளுவிய பாரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளனர்.
இன்று அக்டோபர் 10ம் திகதி கொழும்பு நகரில் மாணவர் – மக்கள் அமைப்பு இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை பாதுகாக்க பாரிய பேரணியினை நடாத்தியிருந்தது.
கடந்த மகிந்த ஆடசி முதல் இன்றைய ஆடசி ஈறாக பல ஆண்டுகளாக தொடர்ச்சியான போராட்டங்களை சுயாதீன ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தி வருகின்றது. ஆட்சியாளர்கள் எவரும் இவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடாத்தியதோ அன்றி உங்கள் பிரச்சினைதான் என்ன என்று வினவியதோ கிடையாது. ஆனால் ஜனநாயக ரீதியான அவர்களின் போராட்டங்களை ஜனநாயக அடிப்படைகளிற்கு மாறாக படைகளை ஏவி அடக்கி ஒடுக்க பார்க்கின்றனர்.
இன்றைய எதிர்ப்பு பேரணியும் அரச பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தடவை மிகவும் திட்டமிட்டு தெரிந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது அவர்களை கொலை செய்யும் நோக்குடன் நடாத்தப்பட்டது.
கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரகை தாக்குதலுடன் மேலதிகமாக கலகம் அடக்கும் குண்டாந்தடி பிரயோகமும் மாணவர்கள் மக்கள் மீது ஜனநாயக வரைமுறைகளை மீறி மிகவும் மோசமாக இடம்பெற்றது.
மேலும் தெரிந்தெடுக்க போராட்ட பேரணி ஒருங்கமைப்பாளர்கள் மீது இரும்பு கம்பி கொண்டு தலையை குறிவைத்து அரச படையினரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களிற்கு உள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் – மக்கள் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய முன்னணியின் வேட்பாளராக நின்றவரும், முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சாரா செயலாளருமான தோழர் துமிந்த  நாகமுவ அவர்கள் தலை மற்றும் முகத்தில் இரும்பு கப்பிகளால் பலத்த தாக்குதலுக்க உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஜனநாயக ரீதியாக அமைதியான வழியில் போராடியவர்கள் மீது இரும்பு கம்பிகளால் தாக்குவது தான் ஜனநாயகத்தின் அடிப்படை மற்றும் சட்டத்தின் ஆட்சியா? இது தான் நல்லாட்சியா?
duminda-flsp-attackedstudent-attackedprotester1monk-attackedprotester2