அனைத்து பல்கலைக்கழக ஏற்பாட்டாளர் விளக்கமறியலில் !

Lahiru-Sugathananda

அனைத்து  பல்கலைக்கழக மாணவர்  சங்க   ஏற்பாட்டாளர்   லஹிரு  வீரசேகர   மற்றும்   அனைத்து   பல்கலைக்கழக பிக்கு  சங்கத்தின்  ஏற்பாட்டாளர் டெம்பிட்டியே சுகாதானந்த  தேரர்   ஆகியோர்  இன்று  ( 12)  பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டு   பின்னர்  கொழும்பு  கோட்டை  நீதவான்  நீதிமன்றில்  ஆஜர்படுத்திய  பின்  எதிர்வரும்  25 ந்  திகதி வரை  விளக்கமறியலில்  வைக்கப்பட்டனர்.

2015 ம்  வருடம்  இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம் ஒன்றினை  காரணம்  காட்டி  தொடரப்பட்ட  வழக்கு  ஒன்றுக்காக  இன்று  வருகை தந்தபோது  அவர்கள்  இவ்வாறு  கைது செய்யப்பட்டனர்.

கடந்த  10 ந் திகதி  மாலம்பே  சைட்டம்  நிறுவனத்தை  தடை  செய்யக்கோரி  அரசாங்கத்தை  வற்புறுத்தி நடைபெற்ற  நடை  பேரணியை  ஏற்பாடு   செய்தமை  குற்றம்  என்ற  நிலைப்பாட்டில்  கோட்டை  போலீசார்  இவ்வாறு  குற்றம்சாட்டியுள்ளனர்.

குறித்த  எதிர்ப்பு  நடை  பேரணி  குறைந்த  பட்சம்  வீதி தடை அருகில்  வருவதற்கு  முன்பே  சர்வதேச  சட்ட  திட்டங்களையாவது  கவனத்தில்  கொள்ளாது   அச்  சட்ட திட்டங்களை  மீறி  பொலிஸாரைக் கொண்டு  கண்ணீர்  புகை மற்றும்  அதி வலு கொண்ட  நீர் தாரை  பிரயோகம்   செய்து  பின்னர்  எதிர்ப்பாளர்களை  விரட்டிச்சென்று  மிலேச்ச  தடியடி  பிரயோகமும்  செய்து  அமைதியாக  வந்த  எதிர்ப்பாளர்களை   கலைக்க  முயற்சித்த  அரசாங்கம்  இறுதியில்  சமூக  உரிமைக்காக  போராடிய  செயற்பாட்டாளர்களை  கைது செய்யவும்  நடவடிக்கை   எடுத்துள்ளது.

ஊழல்  நிரம்பிய  ரணில்  மைத்திரி  கூட்டு அரசாங்கத்தின்  இன்னும்  ஒரு  பொறுப்பற்ற  செயலாக  இதை  கூறலாம் . அரசாங்கம்  தனது  தனியார்மய  கொள்கையை காத்துக்கொள்ள   தேவையான  அனைத்து   மிலேச்ச  செயல்களையும்   செய்யும் என்பது  ரகசியமல்ல .

மாற்றமொன்றை  பெற்றுத்தருவதாக  கூறிக்கொண்டு  ஆட்சிக்கு  வந்த  தற்போதைய  அரசாங்கம்  முன்னைய ஆட்சியின்  பயணத்தை  அதிக  பலமுடன்  பயணிப்பது  முகமாற்றம்   எந்த  பலனையும்  மக்களுக்கு  வழங்க  முடியாது  என்பதனை  உறுதிப்படுத்துகிறது.