அரசாங்கத்தின் தீர்வை அரச வைத்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை – வைத்தியர் கிஷாந்த தசநாயக

2016.04.26-ACGMOA

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிலர் அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுகொள்ளுவதாக கூறினாலும் , அரச வைத்திய அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

பணத்திற்கு மருத்துவ பட்டத்தை விற்பனை செய்யும் சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு சம்பந்தமாக அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்க தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , எமது சங்கமானது ஆரம்பத்திலிருந்தே கல்வியை பணத்திற்கு விற்பனை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தது. அதுமட்டுமல்ல கல்வி விற்பனை பண்டமாக மாற்றுவது , இலவசக் கல்வியையும் , இலவச சுகாதாரத்தையும் அழிவுக்கு கொண்டுசெல்லும் செயற்பாடாகும். முதலாளித்துவ அரசாங்கங்களின் நவ லிபரல் பொருளாதார கொள்கைக்கு எதிராக எமது போராட்டம் தொடரும் , அதே போல் சகல மருத்துவ பீடங்களினதும் மாணவர்கள் 10 மாதங்களாக வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு எதிர்ப்பை காட்டிவருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

acgmoa-press-2017-11-01அகில இலங்கை வைத்தியர்கள் சங்க செயலாளர் ,வைத்தியர் தம்மிக்க பத்திரன, உதவி செயலாளர் வைத்தியர் ஜயந்த ராஜபக்ச ,பொருளாளர் வைத்தியர் கௌசல்ய ராஜபக்ச ஆகியோரும் உடன் இருந்தனர்.