அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடை பேரணியில் .

2016.07.17-jaffna-uni

அரசியல்  கைதிகளை  உடனடியாக  விடுதலை  செய்யும் படி  அரசாங்கத்தை  வற்புறுத்தி  இன்று (14)  யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக  மாணவர்கள்  எதிர்ப்பு  நடை  பேரணியில்  ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக  முன்றலில்  இருந்து  யாழ்ப்பாணம்  மாவட்ட  செயலாளர்  காரியாலயத்திற்கு   நடை  பயணமாக  வந்த  பல்கலைக்கழக  மாணவர்கள்  எதிர்ப்பு  பதாதைகளை  காட்சிப்படுத்தி  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

கடந்த  மாதம்  30 ந்  திகதியில்  இருந்து  யாழ்  பல்கலைக்கழக  மாணவர்கள்   வகுப்பு  பகிஸ்கரிப்பில்  ஈடுபடுவதோடு  இந்த  அநீதிக்கு  எதிராக எதிர்ப்பை காட்டிவருகின்றனர்  . இச்  செயற்பாட்டை   அடக்கும்  முகமாக   மூடப்பட்டிருந்த  பல்கலைக்கழகம்  நேற்று (13)  மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில்  சம்பந்தப்பட்டவர்கள்  இப் பிரச்சினைக்கு  பல்வேறு செயற்பாடுகளில்   தமது  எதிர்ப்பை  அரசாங்கத்திற்கு  காட்டிவந்தனர், ஆனால்  அரசியல் கைதிகளை  விடுதலை  செய்வதற்கு  பதிலாக  மென்மேலும்  இப் பிரச்சினையை  பாரதூரமாக்கும்  விதத்தில்  அரசாங்கம்  தொடர்ந்தும்  செயற்பட்டுவருகின்றது.