ஆசஷ் 4-வது டெஸ்ட்: வார்னர் 21-வது சதம்

warner

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆசஷ் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 3 டெஸ்டில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டுவில் நடந்த 2-வது டெஸ்டில் 120 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 41 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. பாக்சிங்டே என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஒருமுனையில் பேன்கிராப்ட் பொறுமையாக விளையாட மறுமுனையில் இருந்த வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 27.3-வது ஓவரில் அந்த அணி 100 ரன்னை தொட்டது. அப்போது வார்னர் 83 ரன்னிலும், பேன்கிராப்ட் 19 ரன்னிலும் இருந்தனர்.

பேன்கிராப்ட் 26 ரன்னில் வோக்ஸ் பந்தில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 122 ஆக இருந்தது. அடுத்து உஸ்மான் குவாஜா களம் வந்தார். வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 130 பந்தில் 100 ரன்னை எடுத்தார். இதில் 13 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.

70-வது டெஸ்டில் விளையாடும் டேவிட் வார்னருக்கு இது 21-வது சதமாகும். இதன்மூலம் அவர் தனது நாட்டு வீரர்களான டேவிட்பூன், ஹார்வியை சமன் செய்தார். சுமித்தைவிட ஒரு செஞ்சூரி பின்தங்கி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்து வருகிறார்.