எதிர்ப்பாளர்களை தாக்க போலீஸ் இரும்பு கம்பிகளுடன்….. !

33

இன்றையத்தினம்   சைட்டம்  எதிர்ப்பு  மாணவர் மக்கள்  இயக்கத்தின்   எதிர்ப்பு  செயற்பாட்டுக்கு   தாக்குதல்  நடாத்தவந்த   போலீஸ் சிப்பாய்கள்  குண்டாந்தடிக்கு  சமனான  இரும்பு  கம்பிகள்  வைத்திருந்ததை  காணக்கூடியதாக   இருந்ததாக  ஊடகவியாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு  மிலேச்சத்தனமாக   எதிர்ப்பை  அடக்க  போலீசாரை  பயன்படுத்தியது   தொடர்பாக  1977  ல்  ஆட்சிக்கு வந்த  ஜெயவர்த்தேனா  அரசாங்கமும் , 1994 ல்  ஆட்சிக்கு வந்த  சந்திரிக்கா   அரசாங்கமும் அதன்  பிறகு  2005 ல்  ராஜபக்ச  அரசாங்கமும்  பிரபல்யமாக  இருந்தது.

சந்திரிகா  ஆட்சிக்காலத்தில்   எதிர்க்கட்சி  எதிர்ப்பு   நடவடிக்கைக்கு  தாக்குதல்  நடாத்தமுன்   ஊடகவியாளர்களர்களை  தாக்கி  அவர்களின்  புகைப்பட  கருவிகளை  அழித்தனர்.  ராஜபக்ச  ஆட்சிக்காலத்தில்  தாக்குகள்  மட்டுமல்ல  கடத்திச்சென்று  காணாமல்   ஆக்கள்  வரை   அடக்கல்  நீடித்ததால்   மக்களால்   விரட்டியடிக்கப்பட்டனர்.  தற்போதைய  அரசாங்கம்  ஜே.ஆர் .ஜெயவர்த்தேனா  தொடக்கம்  ராஜபக்ச  வரை   அனுபவங்களை  பின்பற்றி   போலீசைக்கொண்டு   அமைதியான  எதிர்ப்புகளை அடக்குவதற்கு   இரும்புக்கம்பிகளையும்   பயன்படுத்துகிறது.iron-rod-policewounded-protester

தற்போதைய  அரசாங்கத்தின்  நிதி  அமைச்சர்  மங்கள  சமரவீராவுக்கு ஒருமுறை   எதிர்க்கட்சி  எதிர்ப்பை  அடக்குவதற்கு  பயன்படுத்திய  கறுவா  தடி  படை  தொடர்பாக  குற்றச்சாட்டு   இருந்தது.  நீதிமன்ற கட்டளையை   கொண்டுவந்து  எதிர்ப்பை  தடை செய்ய  நடவடிக்கை  எடுத்த  ராஜபக்ச  அரசாங்கம்   நீதிமன்றை  உதாசீனப்படுத்தியது  போல்  தற்போதைய  அரசாங்கமும்  அந்த  நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.