தமிழ்
English
Contact
Tuesday 24th April 2018    
காத்திருப்போம்! « Lanka Views

காத்திருப்போம்!நேற்று வரை

நடந்தவற்றை

திரும்பிப்பார்!

 

உனக்கும்

எனக்கும்

எனனதான் மிச்சமிருக்கு!

 

மாடி வீடும்

தங்க ஆபரணமும்

பிரயாணியுமா கேட்டோம்!

 

இல்லை, இல்லை

நாங்கள் கேட்டதெல்லாம்

சுதந்திரக்காற்றை சுவாசிக்க!

 

சமதர்ம

தேசத்தை கட்டி எழுப்ப

சரிநிகராக வாழ!

 

கந்தசாமியும்,

காதரும், அப்புஹாமியும்

கைகோர்த்து வலம் வர!

 

ஒரு சமாதான

‘தேசம்” கேட்கிறோம்

அதைத்தந்துவிட மறுக்கிறாய்!

 

இழப்பதற்கு

‘உயிர்” மட்டுமே மீதமாய்

எங்களிடம் இருக்கின்றது!

 

நம்மவர் சிந்திய ‘ரத்தம்” தானே

எங்கள் தேசத்தின் ‘கங்கைகள்”

கங்கை பாய்ந்த இடமெல்லாம்

 

விளைவர் விடுதலை வீரர்கள்

புரட்சியாளர்கள் அதுவரை

காத்திருப்போம்!

–சந்த்ரு
Related News