சுதந்திரமாக மூச்செடுப்பதற்காவது இடம் கொடு ! – மாற்றத்திற்கான இளைஞர்கள் கண்டி நகரில் எதிர்ப்பில்…

yfc-protest-kandy-air-poluution

இலங்கையில்  வளி மாசடைதல்  அதிகமாக  உள்ள  நகரமாக  கருதப்படும்  கண்டியில் ‘ சுதந்திரமாக  மூச்செடுப்பதற்காவது  இடம்  கொடு ‘  என்ற  தொனிப்பொருளில்   எதிர்ப்பு  பதாகை  கையொப்பமிட  ‘மாற்றத்திற்கான  இளைஞர்கள்’  ( Youth  for  CHEnge )     இயக்கத்தினால்  இன்று  (12)  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

அதிகளவான  வாகன நெரிசல்  மற்றும் முறையற்ற நகர மயமாக்கலின்  காரணமாக  மக்கள்  வளி  மாசடைதலுக்கு  இரையாகி உள்ளனர். விசேடமாக  ஒன்றும்  அறியாத   கர்ப்பிணி  தாய்மார்களின்  கருவில் இருக்கும்  குழந்தைகள் கூட  இந்த  வளி  மாசு  காரணமாக  வாழ்நாள்  முழுவதும்  பாதிக்கும்  நோய்களுக்கு  ஆளாகும்  நிலைமைகள்  காணப்படுகின்றன. இது  தொடர்பாக   அரசாங்க  அதிகாரிகளையும்  , பிரதேச  அதிகாரிகளையும்   வற்புறுத்தும்  மற்றும்  இந்த  நிலைமையை  மாற்றும் பொறுப்பு  தொடர்பாக  மக்களை  விழிப்புணர்வு  செய்யவும்  ,   மக்கள்  எதிர்ப்பை  காட்டுவதற்கும்  இதை    ஏற்பாடு  செய்ததாக  ‘மாற்றத்திற்கான  இளைஞர்கள் ‘  இயக்கம்  கூறியது.

இந்த  நிகழ்வின் இறுதியில்  ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பின்  ஏற்பாட்டாளர்  சுஜித்  குருவிட்ட  சகோதரர்  உட்பட  செயற்பாட்டளர்கள்  ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’  இயக்கம்  தொடர்பாகவும்   எதிர்ப்பு  காட்டுவதன்  நோக்கம்  தொடர்பாகவும்  மக்களுக்கும்,  ஊடகவியாளர்களுக்கும்   சிறு  விளக்கம்  அளித்தனர்.

yfc-kandy4yfc-kandy3yfc-kandy2yfc-kandy1yfc-kandy

Leave a Reply