சைட்டத்தை தடை செய், மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் மீண்டும் போராட்டத்தில் இணைவதாக அறிவிப்பு !

no-saitm-parents1

 

ஹர்ஷ  த சில்வா  அமைச்சரினால்  சைட்டத்தை  தடை  செய்வதாக  அரசாங்கத்தின்  சார்பில்  வழங்கிய உறுதி மொழி நிறைவேற்ற படாமையால் , மருத்துவ பீட  மாணவர்கள் உட்பட  மாணவர்  இயக்கங்கள்  போராட்டத்தில்  குதித்துள்ள  தருணத்தில்  எதிர்ப்பை  விரிவு  படுத்துவதற்காக  மீண்டும் சாகும் வரை  உண்ணாவிரதத்தை  ஆரம்பிக்கவுள்ளதாக  மருத்துவ  பீட  மாணவர்களின்  பெற்றோர் கூறுகின்றனர்.

டிசம்பர் 31 ம்  திகதிக்கு  முன்  சைட்டம் நிறுவனத்தை  ரத்து  செய்வதாக  கூறி , உண்ணாவிரதத்தை  முடிவுக்கு  கொண்டுவருமாறு  ஹர்ஷ  த சில்வா  அமைச்சர்  வழங்கிய  உறுதி மொழி  மீறப்பட்டுள்ளதால்  ஜனவரி  மாதத்தில்   மீண்டும்   உண்ணாவிரதத்தை  ஆரம்பிக்கவுள்ளதாக  அவர்கள்  கூறினர்.  இதனிடையே  உயர்கல்வி  அமைச்சர்  நேற்று  சைட்டம்  மாணவர்களுக்கு  5 வார  கால  சிகிச்சை  பயிற்சியின் பின்னர்  பதிவு  வழங்குவதற்கு  மருத்துவ  சபை  இணக்கம்  தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

டிசம்பர்  31ம் திகதிக்கு  முன் சைட்டத்தை   தடை  செய்வதாக  பிரதி அமைச்சர்   கலாநிதி  ஹர்ஷ  த  சில்வா  உறுதி அளித்திருந்தாலும்  இதுவரை எவ்வித   செயற்பாடும்  எடுக்கப்படவில்லை  என்பதால்  ஜனவரி  மாதத்தில்  தொடர்  உண்ணாவிரதம் ஆரம்பிப்பதாக  மருத்துவ  பீட மாணவர்  பெற்றோர்  அமைப்பு   ஊடக  பேச்சாளர்  வைத்தியர்   நிமல்  கருணாசிரி  ஊடகங்களுக்கு  தெரிவித்தார்.