சைட்டத்தை ரத்து செய்யும் உறுதிப்பாட்டுடன் கோட்டை மாணவர் எதிர்ப்பு மேடை அகற்றப்பட்டது.

lahiru-fort-rally

பணத்திற்கு  பட்டம்  வழங்கும்  மாலம்பே  சைட்டம்  நிறுவனத்தை  ரத்து  செய்யக்கோரி மேற்கொள்ளப்பட்ட  சாகும் வரை  உண்ணாவிரதம்  முடிவுக்கு  கொண்டுவரப்பட்டதை  அடுத்து  இன்று  சைட்டம்  எதிர்ப்பு போராட்ட அணியினர்  கொழும்பு கோட்டை புகையிரத  நிலையம்  முன்னாள்  பொது  கூட்டமொன்றை  நடாத்தினர்.

அனைத்து  பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியம் , அனைத்து  பல்கலைக்கழக  பிக்குகள்  ஒன்றியம்  மற்றும்  மருத்துவ பீட  செயற்பாட்டு  கமிட்டி , இடதுசாரிய  காட்சிகள் , வெகுசன  இயக்க பிரதிநிதிகள்  உட்பட  பலர்  இங்கு  கூடியிருந்தனர்.

மருதானையில்  இருந்து  நடை பேரணியாக  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையம்  வரை  வந்த பின்  கூட்டம்  ஆரம்பிக்கப்பட்டது. சைட்டம்  மருத்துவக் கல்லூரியை  மூடச்சொல்லி  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையம்  முன்னால்  77 நாட்களாக  இடம்பெற்ற  உண்ணாவிரதம்  நிறைவு  பெற்றதோடு   அங்கு அமைக்கப்பட்டிருந்த  மேடையும் அகற்றப்பட்டது.

கூட்டத்தில்  பேசிய  அ.ப. மா.ஒ  ஏற்பாட்டாளர்  லஹிரு  வீரசேகர , சைட்டம்  எதிர்ப்பு  போராட்டத்தை  ஆரம்பித்தது   மாணவர்  இயக்கமானாலும் , அரசாங்கத்தினால்  அறிவிக்கப்பட்டிருக்கும்  சைட்டம் நிறுவனத்தை  ரத்து செய்தல் தீர்மானம்  மாபெரும்  மக்கள்  சக்தியின்  வெற்றியாகும் . மேலும்  கல்வி மற்றும் சுகாதாரத்தை விற்பனை  பண்டமாக்குவதற்கு  எதிரான போராட்டத்திற்கு  சகல  சக்திகளினதும்  ஒத்துழைப்பு  தேவை  என்றும் கூறினார்.

சைட்டம்  போராட்டத்தில்  உண்மையான  மக்கள் நோக்கத்தோடு  போராடியது  யார்  என்பதும்,  போராட்டத்தை  ஆட்சியாளருக்கு  காட்டிக்கொடுத்தது  யார்  என்பதும்  தெரியவந்தாகவும்  அவர் தனது  பேச்சில்  குறிப்பிட்டார். சைட்டம் எதிர்ப்பு  போராட்டத்தின்  முன்னால் மண்டியிட்ட  ஆட்சியாளர்கள் நாளை  வேறு  விதமாக  ஏமாற்று  வேலையை  ஆரம்பிப்பார்களானால்  இந்த  கூடாரத்தை  கழட்டிய  வேகத்தைவிட  பன்மடங்கு  கூடிய  வேகத்துடன்  மீளவும்  அமைப்போம்  என்றார்.