சைட்டத்தை ரத்து செய்வதாக வழங்கிய உத்தரவாதத்தோடு சைட்டம் எதிர்ப்பு உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. !

death-fast

மருத்துவ  மாணவர்  பெற்றோர்  உண்ணாவிரதம்     இருக்கும்  இடத்திற்கு   வருகை  தந்த  அமைச்சர்  ஹர்ஷ  த சில்வா  கலந்துரையாடிய  பின்  சைட்டம்  நிறுவனத்தை  முடிவுக்கு  கொண்டுவருவதாக  உறுதியளித்த்துள்ளார்.

அமைச்சரினால்  எழுத்துமூலம்  இந்த  உத்தரவாதத்திற்கான காரணங்களை  உறுதிப்படுத்தியுள்ளார் என  தகவல்கள்  தெரிவிக்கின்றன . இதனிடையே  மாலம்பே  சைட்டம்  தனியார்  மருத்துவக்கல்லூரியை  டிசம்பர்  மாதம்  31 ந்  திகதியின்  பின்  ரத்து    செய்வதற்கான  தேவையான  நடவடிக்கை எடுப்பதாக  பாராளுமன்றில்  விசேட  உரையாற்றிய  பிரதி  அமைச்சர்  ஹர்ஷ  த சில்வா   கூறினார்.  சைட்டம் நிறுவனத்தை  முழுமையாக  ரத்து  செய்வதற்கும்  ,அந்த  நிறுவனத்தின்  மாணவர்களுக்கு   நியாயம் கிடைக்கவும்,  அதற்காக  இனிமேல்  எவ்வித  பட்டக் கடைகளையும்  ஆரம்பிப்பதில்லை என்ற  இணக்கப்பாட்டுடன்  பெற்றோர்  சாகும்வரை  உண்ணாவிரதத்தை  முடிவுக்கு  கொண்டுவந்துள்ளனர்.

சைட்டம் தனியார்  மருத்துவக் கல்லூரிக்கு இனிமேல்  மாணவர்கள்  சேர்த்துக்கொள்ளுவதில்லை   என்றும்  தற்போது   மருத்துவ  மாணவர்களாக  அந்த  நிறுவனத்தில்  பதிவு  செய்யப்பட்டுள்ள  மாணவர்கள்  தொடர்பாக எடுக்கப்படும் தீர்வு  எதிர்காலத்தில்  அறிவிப்பதாகவும்  அமைச்சர்  மேலும்  தெரிவித்தார்.  எவ்வாறாயினும்    அமைச்சர்       ஹர்ஷ  த சில்வா  இந்த  அறிவிப்பை  பாராளுமன்றில்  செய்திருப்பது அக்டோபர்  29 ந் திகதி வெளியிடப்பட்ட சைட்டம்  தீர்வுக்கு  ஏற்ப  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட  2 வது கமிட்டியின்  தலைவராக என்பதை  மறந்திரக்  கூடாது.  அவருக்கு  பொறுப்பு  வழங்கப்பட்டது  அவ் அரசாங்கத்தின்  ஏமாற்று  தீர்வை  நடைமுறை படுத்தலை  சிபாரிசு  செய்வதற்கே .

இதனிடையே  பெற்றோரின்  உண்ணாவிரதத்தை முடிவுக்கு  கொண்டுவரும்  சந்தர்ப்பத்தில் விசேட  அறிவிப்பை  செய்த  அனைத்து  பல்கலைக்கழக  ஒன்றிய  ஏற்பாட்டாளர்  லஹிரு வீரசேகர , சைட்டம் போராட்டம்  பல  வருடங்களாக  மக்களோடு  இணைந்து  முன்னெடுத்த  போராட்டமாகும்  அது  முடிவுக்கு  வருவது    இலவசக் கல்வியின்  உறுதியான  பாதுகாப்பு  நிலைமையிலேயே . இந்த  உத்தரவாதங்களை , உறுதிப்பாட்டை  மீறினால்  மீண்டும்  போராட்டக் களத்திற்கு எவ்வித  தயக்கமுமின்றி வருவோம்  என்றும் அவர்  கூறினார்.

 

hunger-strike-ended