சைட்டம் எதிர்ப்புக்கு போலீஸ் தாக்குதல் , 10 பேர் வைத்தியசாலையில், 5 பேர் கைது !

student-attacked

சைட்டம்  எதிர்ப்பு  மாணவர்  மக்கள்  இயக்கம்  இன்று  (10)  நடாத்திய  எதிர்ப்பு  நடவடிக்கைக்கு   போலீஸ்  காட்டுமிராண்டித்தனமான  தாக்குதல்  நடத்தியதில்   அரசியல்  செயற்பாட்டாளர்கள்  உட்பட  எதிர்ப்பாளர்கள்  பலர்  காயமடைந்து  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தர்வர்களில்  முன்னிலை  சோஷலிஸ  கட்சியின் துமிந்த  நாகமுவவும்   அடங்குவார்.அதேபோல்  பல்கலைக்கழக   மாணவர்கள் , பிக்குகள்  மற்றும்  தாய்  தந்தையரும்  காயமடைந்து  சிகிச்சைக்காக  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அறியப்படுகிறது.

போலீசார்   இந்த  காட்டுமிராண்டித்தனமான  தாக்குதலின்  பின்  மாணவர்  செயற்பாட்டாளர்கள்  5 பேர்  கைது   செய்துள்ளனர்.  கைது  செய்யப்பட்டவர்கள்   சட்டத்தரணிகள்  மூலம்   விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த  எதிர்ப்பு  இயக்கம்  தொடர்பாக  இன்று  போலீசார்  நீதிமன்ற  கட்டளை  பெற்றிருந்தனர் . ஆனால்   மக்கள்  எதிரிப்பு  என்பது  நீதிமன்ற  அனுமதியுடன்  செய்யப்படுவது அல்ல.  என்றும்  எதிர்ப்பில்  ஈடுபடுவது  மக்கள்  உரிமை என்று  சைட்டம் எதிர்ப்பு  மாணவர்  மக்கள்  இயக்க  செயற்பாட்டாளர்கள்   கூறுகின்றனர்.

சைட்டம்  எதிர்ப்பு  மாணவர்  மக்கள்  இயக்கம்  கடந்த  காலங்களில்  தொடர்ச்சியாக  நடாத்திய  எதிர்ப்பு  நடவடிக்கைகளுக்கு   எவ்வித  தீர்வையும்  பெற்றுக்கொடுக்க  முடியாத  அரசாங்கம்   போலீசாரை  பயன்படுத்தி  அமைதியான  எதிர்ப்பு  நடவடிக்கைகளுக்கு   தாக்குதல்  நடத்துவதும்  காயப்படுத்துவதும்  பின்னர்  நீதிமன்ற  உத்தரவை  மீறினர்   என்ற  குற்றச்சாட்டை  சுமத்தி   நீதிமன்றத்திற்கு   கொண்டுசெல்வது   சாதாரண  நிகழ்வாக  உள்ளது.

 

duminda-flsp-attackedattacked-studentmonk-attackedprotester2protestbikku