சைட்டம் போராட்டத்தின் வாக்குறுதி மீறப்பட்டுள்ளது – போராட்டத்தை தவிர வேறு மாற்று இல்லை ! – லஹிரு வீரசேகர

lahiru

பணத்திற்கு  மருத்துவ  பட்டத்தை  விற்கும் மாலம்பே  சைட்டம்  நிறுவனத்தை  தடை செய்வதாக  அரசாங்கத்தினால்  வழங்கப்பட்ட  வாக்குறுதி  மீறப்பட்டமையும் ,கல்வியை  பணத்திற்கு  விற்பனை செய்யும்  செயற்பாடு  தொடர்வது  தொடர்பாக  எதிர்ப்பு  தெரிவித்து , தொடர்ந்தும்  போராட்ட  செயற்பாடு தவிர்ந்து  வேறு  மாற்று  இல்லை என  அனைத்து பல்கலைக்கழக  மாணவர்  ஒன்றியம் ஜனாதிபதிக்கு  தெரிவித்துள்ளது.

அனைத்து பலக்லைக்கழக மாணவர்  ஒன்றியம்  சார்பாக  ஜனாதிபதிக்கு  கடிதம்   ஒன்றை அனுப்பி  அனைத்து பலக்லைக்கழக மாணவர்  ஒன்றிய ஏற்பாட்டாளர்  லஹிரு  வீரசேகர  இது  பற்றி  தெரிவித்தார்.

சைட்டம்  எதிர்ப்பு  போராட்டத்தில் அரசாங்கம்  தலையிட்டு  சைட்டம்  நிறுவனத்தை  தடை செய்வதாக  எழுத்து  மூல  அறிவித்தலையும் ,  சைட்டம் மாணவர்களுக்கு   சார்பான  நிறுவனம்  ஒன்றை  எதிர்காலத்தில்  ஏற்படுத்தப்போவதில்லை  என்ற  வாய்மூல  வாக்குறுதியையும்  வழங்கியது  தொடர்பாக  ஞாபகமூட்டிய  அ.ப.மா. ஒ. ஏற்பாட்டாளர்  அந்த  வாக்குறுதிகள் இரண்டும்  அரசாங்கத்தினால்   மீறப்பட்டுள்ளதன் காரணமாக  இந்த  முடிவை  எடுக்க நேர்ந்ததாக  குறிப்பிட்டார்.