சைட்டம் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் வழங்க மருத்துவ சபை இணக்கம் – லஷ்மண் கிரியெல்ல

Lakshman-Kiriella

சைட்டம்  மாணவர்களுக்கு 5 வார  சிகிச்சை பயிற்சி  வழங்கியதன்  பின்னர்  மருத்துவ  பட்டம் வழங்க மருத்துவ  சபை  இணக்கம்  தெரிவித்தாக   உயர்கல்வி  மற்றும்  நெடுஞ்சாலைகள்  அமைச்சர்  லக்ஷ்மன்  கிரியெல்ல கூறினார்.

இன்று (30) ந் திகதி  உயர்   தொழில்நுட்ப நிறுவனத்தில்   நடைபெற்ற   பட்டமளிப்பு   வைபவத்தில்  கலந்துகொண்டு  இவ்வாறு  கூறினார்.

மருத்துவ  பீட மாணவர்கள் 8 மாத  காலத்தை  வீணடித்தார்கள்   இறுதியில்  அவர்கள்  தோல்வியை  தழுவியுள்ளதாகவும்  அவர்  மேலும்  இங்கு  குறிப்பிட்டார்.

எப்படியாயினும்  இந்த கருத்தோடு  மருத்துவ சபை  இணங்கவில்லை  என்றும்   பயிற்சி  தொடர்பில்  பல்வேறு  கலந்துரையாடல்கள்  நடத்தப்பட்டாலும்  இதுவரை  எவ்வித  தீர்மானமும்  உத்தியோகபூர்வமாக   ஏற்றுக்கொள்ளப்படவில்லை  என்று  மருத்துவ  சபையின் பதிவாளர்  டாக்டர்  டெரன்ஸ்  த சில்வா கூறினார்.

சைட்டம்  பிரச்சினைக்கு  அரசாங்கத்தின்  தீர்வும்  அத்தோடு  எதிர்காலத்தில்  நடைமுறை படுத்த  எதிர்பார்க்கும்  செயற்பாடு  தொடர்பாகவும்  இதிலிருந்து  தெளிவாக  தெரிவதோடு ,  இவ்வாறான  பிரசாரத்தின் ஊடாக குறித்த  செயற்பாட்டை  சமூகமயமாக்க  அரசாங்கம்   முயற்சிப்பதையும்  தெளிவு  படுத்திக்கொள்ள  வேண்டும்