ஜனாதிபதியின் காலத்தை கடத்தும் கலந்துரையாடல் ஏமாற்று வேண்டாம் – சைட்டம் எதிர்ப்பு தாய் , தந்தையர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.!

hunger-strike

சைட்டம் திருட்டு பட்டக் கடையை தடை செய்யும் வரை சாகும்வரை உண்ணாவிரதத்தை தீர்மானித்தவாறு ஆரம்பிப்பதற்கு மருத்துவ மாணவர் தாய் தந்தையர் சிலர் உடன்பட்டுள்ளனர்.
சைட்டத்தை தடை செய்யக் கோரும் கோரிக்கைக்கு இதுவரை எவ்வித உடன்பாடான பதிலும் இல்லாது,இறுதியில் சைட்டம் எதிர்ப்பு பெற்றோரின் உண்ணாவிரதத்தை நிறுத்தும் நோக்கோடு ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அறிவித்ததை கவனத்தில் கொள்ளாது இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க பெற்றோர் தீர்மானித்துள்ளனர் .
ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் முடியும் வரை பல்வேறு ஏமாற்று கலந்துரையாடல்கள் மூலமும் எதிர்ப்புகளுக்கு தாக்குதல் நடத்தியும் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக பெற்றோர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

fasting-un-to-death