தபால் ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட தயார். !

Postal-Sri-Lanka

தபால் திணைக்களத்தில் சேவையாளர்களை இணைத்துக்கொள்ளும் விதி முறைகளை ஒழுங்கமைப்பதாக அரசாங்கம் வழங்கிய உறுதி மொழி தொடர்ந்தும் மீறிவருவதை எதிர்த்து நாளை (27) ந் திகதி தபால் ஊழியர்கள் நாடெங்கிலும் உள்ள நகரங்களில் எதிர்ப்பில் ஈடுபட இருப்பதாக தொழிற் சங்க கூட்டணி கூறுகிறது.

இதற்கு முன் இது தொடர்பாக நடாத்தப் பட்ட கலந்துரையாடலுக்கு ஏற்ப 2 வாரங்களுக்குள் தீர்வு பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதி மொழி மீறப்பட்டதன் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாகவும் , இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு பெற்று தாராவிடின் எதிர்வரும் காலங்களில் வாக்கு அட்டை பகிர்ந்தளிப்பில் இருந்து விலகி தமது எதிர்ப்பை காட்டுவதாக அந்த தொழிற் சங்க கூட்டணி மேலும் கருத்து தெரிவித்தது.