தமிழ்
English
Contact
Tuesday 24th April 2018    
“தமிழ்-முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள்” « Lanka Views

“தமிழ்-முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள்”கிழக்கில் மதவாத-இனவாத சக்திகளால் உருவாக்கப்படும் தமிழ் பேசும் மக்களுக்கிடையினான முரண்பாடுகளுக்கு எதிராக இன்று சமவுரிமை இயக்கம், கைகளால் எழுதப்பட்ட சுவரொடிப் பிரச்சாரத்தை கிழக்கு முழுவதும் முன்னெடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சிறுபான்மை இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இரு சமூகங்களும் சிக்குப்படக்கூடாது என்ற வகையில், சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்பு, இந்தச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

“அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே”, “தமிழ்-முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள்”, “இனவாத செயற்பாடுகளுக்குப் பலியாகாதீர்கள்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இனங்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலைதொடர்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
MER2Related News