நான் மௌனித்தேன் ……

பதிவிறக்கு (1)

 

நான் மௌனித்தேன்

ஆரம்பத்தில்  அவர்கள் மனம்பேரியை  வன்புணர்வு  செய்து  உயிருடன்  புதைத்தனர் ,

நான் மௌனித்தேன் ………..

ஏன்  எனில் போராட்டம் ஒன்று நடந்தமையால் ,

அதன் பிறகு அவர்கள் காவத்தை  பெண்களை தேடி வந்தனர் ,

நான் மௌனித்தேன் ………

ஏன்  எனில்  நான் காவத்தையைச் சேர்ந்தவன் அல்ல என்பதால் ,

அதன் பிறகு அவர்கள் நூரி தோட்ட  பெண்களை  தேடி வந்தனர் ,

நான் மௌனித்தேன் …..

ஏன் எனில் நான் நூரி தோட்டத்தில்  இல்லை என்பதால் ,

அதன் பிறகு அவர்கள் வடக்கில் பெண்களை தேடி வந்தனர் ,

நான் மௌனித்தேன் …..

கிருசாந்தி  குமாரசுவாமி ,கோணேஸ்வரி ,இசைப்பிரியா  எனது சகோதரிகள் இல்லை என்பதால்,

அதன் பிறகு  அவர்கள் வெள்ளை  தோல் பெண்களை தேடி வந்தனர் ,

விக்டோரியா  அலெக்ஸாண்டரை  எட்டு ஆண்கள்  கூட்டு வன்புணர்வு  செய்தனர் ,

நான் மௌனித்தேன் ………

விக்டோரியா  அலெக்ஸாண்டர்  வெள்ளைக்காரி  என்பதால் ,

அதன் பிறகு அவர்கள்   ரீடா  ஜோன்சை  மிருகத்தனமாக  வன்புணர்வு செய்து,  மோதர கடற்கரையில் வீசி சென்றனர்,

நான் மௌனித்தேன்………

அவள் இந்தியன் என்பதால் ,  மாலை நேரம்  ஆபரணங்கள்  அணிந்து ,கடற்கரையில்  இருந்தமையால்  தானே தேடி கொண்டது என்பதால் ,

அதன் பிறகு அவர்கள்  விஜேராமையில்  ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்வு  செய்தனர் ,

நான் மௌனித்தேன் ……..

அவள் ஒரு விபச்சாரி என்பதால் ,

அதன் பிறகு அவர்கள்  அக்குறேஸ்ஸ யில் , மொனராகலையில்  நூற்றுக்கணக்கான  பெண்களை வன்புணர்வு  செய்து  கொண்டாடினர் ,

நான் மௌனித்தேன் ………

அரசியல் வாதிகளுக்கு உள்ள  பயத்தால் ,

அதன் பிறகு அவர்கள் லோகராணியை  வன்புணர்வு  செய்தனர்.  அவளின் நிர்வாண உடலத்தை  புனித  தேவாலயத்தில்  வீசிச்சென்றனர்,

நான் மௌனித்தேன்…..

 அதன் பிறகு அவர்கள் சரண்யா செல்வராசாவை வன்புணர்வு செய்தனர்,

நான் மௌனித்தேன் …….

அதன் பிறகு அவர்கள்  வித்யா சிவலோகநாதனை  வன்புணர்வு செய்தனர் ,

நான் மௌனித்தேன் ……..

ஏன்  ஏனெனில் அவள் தமிழ்  என்பதால் , புங்குடு தீவு  எனும் சிறிய தீவில்  வாழ்ந்தமையால் ,

அதன் பிறகு அவர்கள்  கொடதெனியவில்  நாலு வயது  சேயாவையை  வன்புணர்வு செய்து  கொன்று போட்டனர் ,

நான் மௌனித்தேன் …….

ஏன்  எனில்  சேயா  எனது மகள் இல்லை என்பதால் ,

அதன் பிறகு அவர்கள் வவுனியாவில் ஹரிஷ்ணவியை  வன்புணர்வு செய்து தொங்கவிட்டனர் ,

நான் மௌனித்தேன்………

ஏன்  எனில் ஹரிஷ்ணவி  எனது தூரத்து சொந்தம் கூட இல்லை என்பதால்,

அதன் பிறகு அவர்கள்  …………

 …… சிங்  st

பதிவிறக்கு (2)