நுரைஈரல் செயலிழந்தது காரணமாக பிள்ளைகள் இருவர் மரணத்தின் விளிம்பில் – இலவச சுகாதாரம் இல்லாத ‘சுரக்ஸ்சா’ எதற்காக?

kids-health

நுரைஈரல்  செயலிழந்தது  காரணமாக நவகத்தேகம  பிரதேச  பிள்ளைகள்  இருவருக்கு  உடனடியாக  நுரைஈரல்  மாற்று  சிகிச்சை  செய்ய வேண்டியிருந்தாலும் , பணம்  இல்லாத  காரணத்தினால்  அபாய நிலைமையில் இருப்பதாக  ஊடகங்கள்   தெரிவிக்கின்றன.

நவகத்தேகம  மகா அந்தரவெவ  பிரதேசத்தில்   வசிக்கும்  குறைந்த  வருமானம்  உள்ள  குடும்பமொன்றின்  5 வயது  பினுலி ஜிந்தாரா  மற்றும்  அவரின்  3 வயதுடைய  சகோதரர்  சாமிக்க ஹர்ஷண  ஆகியோரே  இவ்வாறு   உயிர் அச்சுறுத்தலுக்கு  முகம்  கொடுத்துள்ளனர். இந்த  பிள்ளைகளின்  மூத்த  சகோதர , சகோதரிகள்  மூவர்  சிறு  வயதிலேயே   நுரைஈரல்  சம்பந்த பட்ட  நோய் காரணமாக  உயிர்  இழந்துள்ளதாக  தெரிய  வருகிறது.  அதன்காரணமாக  இவர்கள்  இருவர்  பிறந்தவுடனேயே  வைத்திய  பரிசோதனைக்கு  உட்படுத்தினர்.  இதன் போது  இவர்களுக்கும்  நுரைஈரல்  தொடர்பான  நோய்  இருப்பது  தெரியவந்துள்ளது.  இவர்களை   காப்பாற்ற வேண்டுமானால்  நுரைஈரல்  மாற்று  சிகிச்சை  செய்யவேண்டும்  என்று  வைத்தியர்கள் பரிந்துரைத்தாலும்   யுத்தத்தினால்  ஊனமாகியுள்ள  ராணுவ  வீரரான அவர்களின்  தந்தைக்கும்,  தாயிற்கும் அதற்கு  வசதி  இல்லை . மூத்த  பிள்ளைக்கு  இன்னும்  ஒன்றரை  வருடத்திற்குள்  மாற்று  சிகிச்சையும் , கடைசி  பிள்ளைக்கு  இன்னும்  3 மாதத்திற்குள்   சிகிச்சை  செய்ய வேண்டும் .

தற்போது  பெற்றோருக்கு  பிள்ளைகள்  இருவர்  இறக்கும் வரை  பார்த்திருக்கவேண்டும்  அல்லது  பிள்ளைகளுக்காக  கொள்ளை அடித்தல்   போன்ற  நாசகார  செயல்களில்   ஈடுபடவேண்டும் . அவ்வாறு  இல்லையெனில்  குடும்பத்துடன்  தற்கொலை  செய்துக்கொள்ளவேண்டும்.  மக்களின்  வாழ்வு  இலவச  சுகாதாரத்தோடு  எந்தளவு  இணைந்துள்ளது   என்பது  இதைவிட  வேறு  சிறந்த   உதாரணங்கள்  இருக்கமுடியாது.  ஆட்சியாளர்கள்  இந்த செய்தியின் பின்  ‘சுரக்ஸ்சா’  முறையில்   பணம் பெற்று தருவதாக    கூறுவதற்கு  இடமுண்டு. ஆனால்  சுரக்ஸ்சா  போன்ற  போலியான  திட்டங்களை  ஆட்சியாளர்கள்  முன்னெடுக்க   செய்யும்  பிரசார நடவடிக்கைகளுக்கு ஏமாறாமல் இந்த மாதிரியான  உயிர்களை  வாழவைக்கும்   இலவச  சுகாதார  உரிமைகளை பாதுகாப்பது  இன்றைய   நாளின்  தேவையானது  ஒன்றாகும்.

Leave a Reply