பலாலி ராணுவ முகாமிற்காக அபகரித்த நிலங்களை விடக்கோரி ஆர்ப்பாட்டம்!

valikamam-land-rights
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி , வடக்கு பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்காக அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள கையளிக்க கோரி  காணி உரிமையாளர்கள் இன்று (5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவம் பாரம்பரிய நிலங்களை கையகப்படுத்தியதால்   இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் கடந்த 27 வருடங்களாக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். வலிகாமம் வடக்கில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றன. ஆர்ப்பாட்டகாரர்கள் தமது நிலங்களை மீள கையளிக்குமாறு வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதப்படையினரால் விடுதலைப்புலிகளுடனான போரின் போத 1200 குடும்பங்கள் வாழ்ந்த அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டன.
palali-house