பார்சிலோனாவில் பொலிஸ் காடைத்தனத்தை கண்டித்து வேலைநிறுத்தம் மற்றும் பேரணி

Barcelona

கடந்த ஞாயிறு ஸ்பெயினின் கற்றலானிய பிரதேசத்தில் இடம்பெற்ற  சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பின்போது ஸ்பானிய பொலிசாரின் வன்முறை தாக்குதல்களை கண்டித்து இன்று (03) கற்றலானியா தலைநகரமான பார்சிலோனாவில் வேலைநிறுத்தமும் பேரணியும் இடம்பெற்றது.

 

தன்னாட்சி கோரும் வடக்கு கிழக்கு  பிராந்தியத்தின் பிற முக்கிய நகரங்களிலும்  ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன.

ஞாயிறு வாக்குப்பதிவில் ஸ்பானிய பொலிசாரின்  “உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் கடுமையான மீறல்களை” கண்டித்து  உள்ளூர் தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

சுமார் 300,000 பேர் பார்சிலோனாவில்  வீதியில் இறங்கி  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளதாக  AFP செய்தி நிறுவன செய்திகள் தெரிவிக்கின்றன.