பால்மாவின் விலையும் அதிகரிக்கும் அறிகுறி !

milkpowder

பால்மாவிற்கான வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் , உடனடியாக விலையை அதிகரிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு நுகர்வோர் நடவடிக்கை தொடர்பிலான அதிகார சபைக்கு குறித்த கம்பெனிகளால் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதன் அடிப்படையில் குறித்த கம்பெனியால் பால்மாவிற்கான பெறுமதி சேர் வரியை (வாட்) விலக்கிக்கொள்ள இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை நுகர்வோர் நடவடிக்கை தொடர்பிலான அதிகார சபை நிதி அமைச்சுக்கு முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலில் பால்மாவின் விலை அதிகரிப்பு அரசாங்கத்திற்கு பாதிப்பான விடயமாக அமைவதால் இந்த விலை அதிகரிப்பை தாமதப் படுத்தல் காரணியாய் அமையும்.