புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தில் …!

train

புகையிரத  சாரதிகள்     இன்று  (11)  நள்ளிரவு  முதல்  வேலை   நிறுத்தத்தில்  ஈடுபடப்போவதாக   லோகமோடிவ்  ஒப்பரேட்டர்ஸ்  என்ஜினீயர்ஸ்  சாரதிகள்  சங்கம்  அறிவித்துள்ளதோடு  இன்று  மாலை  முதல்  மருதானை மற்றும்  கொழும்பு  கோட்டையில்  ஆரம்பமாக  தயாராகவிருந்த  புகையிரத  பயணங்கள்  பல  ரத்து  செய்யப்பட்டுள்ளதாக  அறியப்படுகிறது.

குறித்த பிரச்சினை  தொடர்பாக  இன்று மாலை  அதிகாரிகளோடு  இடம்பெற்ற  கலந்துரையாடல்  தோல்வியில்   முடிந்ததாகவும் , புகையிரத  உதவியாளர்கள்  ஆட் சேர்ப்பில்   உள்ள  நடைமுறை  பிரச்சினையை  முன்வைத்து  இந்த  வேலை  நிறுத்தம் மேற்கொள்ளுவதாக   அந்த  சங்கம்  மேலும் கூறியது.

குறித்த  வேலை நிறுத்தத்திற்கு  தமது  ஒத்துழைப்பை  வழங்குவதாக  புகையிரத  அதிபர்கள்  சங்கம்  கூறுகிறது.