மகிந்த பிரிவினருடன் இணைந்து போட்டியிட ஸ்ரீ.ல.சு.க. மத்திய குழு சபை இணக்கம்.

maithripala-Mahinda

நேற்று (22) இரவு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு சபை கூட்டத்தில் மகிந்த பிரிவினராக செயல்படும் குழுவினருடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறியப்படுகிறது.
இதன் போது மத்திய வங்கி பிணை முறி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஊடங்களுக்கு தெரிவித்தார். பலமுறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டாலும் ஒவ்வொருமுறையும் மீண்டும் ஒன்று சேர்ந்ததாக மத்திய குழு சபை கூட்டத்தின் பின் முன்னால் பிரதமர் தீமு ஜயரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இருந்தாலும் தற்போதய கூட்டு எதிர்கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான தேவை இல்லையென முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவு படுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து செற்பாடுகளையும் எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.