மாலம்பே ‘சிலிட் – சைட்டம் ‘ சூழ்ச்சியை தோற்கடிப்போம் ! – மருத்துவ பீட மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில்

Saitm-Protest2

மாலம்பே  சைட்டம்  திருட்டு  பட்டக் கடையைக்கு எதிராக  திரண்டெழுந்த  பாரிய  மக்கள்  எதிர்ப்பு  காரணமாக  அதனை  தடை செய்வதாக  அரசாங்கம்  வழங்கிய  உறுதிப்பாட்டை  மீறி  சிலிட் நிறுவனத்துடன்  இணைத்து  சைட்டம்   நிறுவனத்தை  மீண்டும்  நடாத்திச்செல்லும்   சூழ்ச்சியை  அரசாங்கம்  முன்னெடுத்துள்ளது.

சுகாதார  அமைச்சர்  ராஜித  சேனாரத்னவினால்  நேற்று  பகிரங்கமாக  கூறியுள்ளார்   சைட்டம் நிறுவனத்தில்    மருத்துவ  கல்வியை  பெற்ற மாணவர்களுக்காக  சிலிட் நிறுவனத்தில்  அவர்களுக்கு  தமது  கல்வி  நடவடிக்கைகளை  சந்தர்ப்பம்  வழங்கப்படும்  என்று . ஆனால்  ஹர்ஷ  த சில்வா  கமிட்டியினால்  சைட்டம்  எதிர்ப்பை  தீர்ப்பதற்கு  டிசம்பர்  31  முதல்  சைட்டம்  நிறுவனம்  ரத்து  செய்யப்படுவதாகவும்   வேறு  முறையில்  அது  மீளவும்  ஆரம்பிக்கப்படமாட்டாது  எனவும்  கூறப்பட்டிருந்தது.  இதனோடு  இணைந்ததாக  மருத்துவ பீட  மாணவர்  குழுவும் , மருத்துவ  பீட  மாணவர்  பெற்றோரும்  முன்னெடுத்த  எதிர்ப்பு  கைவிடப்பட்டது  ஹர்ஷ  த சில்வா  கமிட்டியினால்  வழங்கப்பட்ட  எழுத்துமூல  உறுதிப்பாடு  காரணமாக.  மாணவர்  இயக்கத்தினால்  , அரசாங்கத்தினால்  புதிதாக  ஆரம்பிக்கப்படவிருப்பதாக  அறிவிக்கப்பட்ட  சபரகமுவ  , வட மேல்   அல்லது  மொரட்டுவ  மருத்துவ  பீடங்களில்  தமது  மருத்துவ கல்வியை  சம்பூரணப்படுத்த  வாய்ப்பு  வழங்கப்  படவேண்டும் என்று  கோரிக்கை  விடப்பட்டது.  ஆனால்  அரசாங்கம்  தற்போது  முயற்சிப்பது அந்த  சைட்டம்  மாணவர்களையும்  பலியாக்கி  கல்வியை  விற்கும்  திட்டத்தை  நிறைவேற்றிக்கொள்ளும்  நோக்கத்தை  அடைவதற்கே.

Saitm-Protest1Saitm-Protest3Saitm-ProtestSaitm-Protest4