மிலேச்ச போலீஸ் தாக்குதலில் காயமடைந்த துமிந்த நாகமுவ அவசர சத்திர சிகிச்சைக்கு ..!

Duminda-Nagamuwa

கடந்த  10 ந்  திகதி சைட்டத்தை  தடை  செய்ய  அரசாங்கத்தை  வற்புறுத்தி  சைட்டம்  எதிர்ப்பு  மாணவர்  மக்கள்  இயக்கத்தினால்   ஏற்பாடு  செய்திருந்த  அமைதியான  எதிர்ப்பு  நடை  பேரணிக்கு  பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட  மிலேச்ச  தாக்குதலில்  காயமடைந்த  முன்னிலை  சோஷலிஸக்   கட்சியின்   பிரச்சார  செயலாளர்  துமிந்த  நாகமுவ   இன்று   (11)  சத்திர சிகிச்சைக்கு  உட்படுத்தப்படவுள்ளார்.

ரணில்  மைத்திரி  கூட்டு  அரசாங்கத்தின்  தேவை  கருதி  பொலிஸாரினால்  சர்வதேச    சட்டத்தை மீறி  எதிர்ப்பாளர்கள்  மீது  நேரடியான  கண்ணீர் புகைக்குண்டு  தாக்குதல்  நடத்திமையால்  படுகாயமடைந்த  செயலாளர்  உட்பட  10பேர்  கொழும்பு  தேசிய  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

துமிந்த  நாகமுவ  அவர்களின்  முகத்திற்கு  கேஸ் கனிஸ்டர்   ஒன்று  தாக்கியதால்  அவரின்  முகத்தில்  எலும்பு  முறிவு  ஏற்பட்டுள்ளதன்  காரணமாக  அவருக்கு  இந்த  சத்திர  சிகிச்சை  செய்வதாக  வைத்தியர்கள்  கூறுகிறார்கள்.

குறித்த  எதிர்ப்பு  நடவடிக்கையை  கலைப்பதாக  கூறிக்கொண்டு  போலீசார்  எதிர்ப்பாளர்கள் மீது  நடத்திய  கண்ணீர்  புகை , பாவனைக்கு  பொருத்தமில்லாத  அதிக  விஷம் அடங்கிய  காலம் பிந்தியது என  தெரியவந்துள்ளது.  இதற்கு முன்  பல்வேறு சந்தர்ப்பங்களில்   இவ்வாறு  காலம் கடந்த  கண்ணீர் புகை குண்டுகளை  பாவித்து  எதிர்ப்பாளர்கள்   மீது  போலீசார்   தாக்குதல்  நடத்தியிருந்தனர்.

duminda-flsp-attacked

கடந்த  10 ந்  திகதி  தாக்குதலுக்கு  போலீசார்  பாவித்த  காலம் பிந்திய  கேஸ்  கனிஸ்டர்  ஒன்று.

Tear-Gas