ரணில் – மைத்திரி கூட்டு போலவே ராஜபக்ஸாக்களும் ஏகாதிபத்திய திட்டங்களுக்கு சார்பான பிரிவினரே – குமார் குணரத்னம்
Posted on 10.20.2017 by Singhst in Top News with 0 Comments
போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பைக்காட்டும் ராஜபக்சவின் சர்வாதிகார இனவாத ஆட்சியை மக்கள் நிராகரித்தாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவர ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தை முதன்மை படுத்திய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக முன்னிலை சோஷலிஸக் கட்சின் அமைப்பு செயலாளர் குமார் குணரத்னம் கூறினார்.
முன்னிலை சோஷலிஸக் கட்சி ‘ ஏகாதிபத்திய வேட்டையை மீறிய மக்கள் போராட்டம் ‘ என்ற தொனிப்பொருளில் இன்று (19) கம்பஹா சனச மண்டபத்தில் நடாத்திய கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார்.
” மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார இனவாத ஆட்சியை மக்கள் நிராகரித்த நிலைமையின் கீழ் 2015 ஜனவரி 8 ந் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவர அமெரிக்க தூதுவராலயத்தை முதன்மைப்படுத்திய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ராஜபக்சவின் அடக்குமுறையிலான ஊழல் ஆட்சி காரணமாக அதற்கு பொருத்தமான மக்கள் எதிர்ப்பு வலுவடைந்து காணப்பட்டது….”
இன்றும் ராஜபக்சவை சுற்றியிருக்கும் சக்திகளிடம் உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளதா? ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இவர்களால் எதிர்ப்புகள் இல்லை . தற்போதிருக்கும் ரணில் மைத்திரி அரசாங்கத்தை போலவே அவர்கள் செயல்படுவதும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் வழங்கும் பட்டியலுக்கு ஏற்பவே . 2005 முதல் இருந்த ராஜபக்ச ஆட்சி இதற்கு சிறந்த உதாரணம் . ஆனால் இவர்கள் போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பை காட்டுகிறார்கள் . இவ்வாறு தாம் தேர்ந்தெடுத்த முகாம்களுக்கு எதிராக மட்டும் சுலோகங்களை உச்சரிப்பதன் ஊடாக நிர்மாணிக்கப் படுவது தேசியவாதமும் , இனவாதமுமே….”
இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் சொற்பொழிவாற்றிய அவர் உலக ஏகாதிபத்தியத்தின் தன்மையையும் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் ஏகாதிபத்தியத்தின் இலாபத்தின் தேவைகருதி கையாளப்படுவது தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.