ரயன் ஜயலத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

rayan-jayalath

மருத்துவ  பீட  மாணவர்  செயற்பாட்டாளர்  ரயன்  ஜயலத்  எதிர்வரும்  20 ந்  திகதிவரை  மீண்டும்    விளக்கமறியல்       வைக்க  இன்று (11)  மாளிகாகந்த   நீதவான்   உத்தரவிட்டார் .

கடந்த  ஜூன்  மாதம்  22 ந்   திகதி  சுகாதார  அமைச்சில்  மேற்கொள்ளப்பட்ட  எதிர்ப்பு  நடவடிக்கையின் போது  அமைச்சு  சொத்துக்களுக்கு  சேதம்  விளைவித்ததாக  அமைச்சின்  மேலதிக  செயலாளர்  செய்த  முறைப்பாட்டிற்கு  ஏற்ப  தொடரப்பட்ட  வழக்கு  இன்று  மாளிகாகந்த   நீதவான் நீதிமன்றில்  விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட  போது  இந்த  விளக்கமறியல்  நீடிப்பு  செய்யப்பட்டது.

அதனடிப்படையில்   ஆகஸ்ட்  மாதம்  18 ந்  திகதி முதல்  55 நாட்கள்  இதுவரை  விளக்கமறியலில்   இருப்பதோடு  அரசாங்கத்தின்  மறைமுக  தலையிடு   காரணமாக  பிணை  வழங்கல்  தடுக்கப்படுவது   தெளிவாக  தெரிகிறது. இலவசக்கல்வி  மற்றும் இலவச  சுகாதாரம்   சம்பந்தமாக  குரல்  எழுப்பும்  சக்திகளை  அடக்கி  தனியார்மய  கொள்கைகளை  செயற்பாட்டுக்கு  கொண்டுவர  அரசாங்கம்  பல்வேறு  செயற்பாடுகளில்  ஈடுபடுகிறது