லலித் – குகன் கடத்தல் வழக்கு விசாரணையை அரசாங்கம் திசைமாற்ற முயற்சி!

001Lalith

அரசியல் ஆர்வலர்கள் லலித் மற்றும் குகன் காணாமல்போன வழக்கு தொடர்பாக இன்று (08/12/2017) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

லலித் மற்றும் குகனை யாரும் கடத்தி செல்லவில்லை அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்க கூடும் என அரசு வழக்கறிஞர்கள் வெட்கமின்றி நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

லலித் மற்றும் குகன் சந்தித்த சாலை, ஒரு மீன்பிடி கிராமத்தை நோக்கி இருந்ததாகவும், மீனவர்களின் படகுகளை பாவித்து அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

எனினும், லலித் – குகன் சார்பில் வழக்கை நடாத்தும் வக்கீல்களால் அரச தரப்பு வக்கீல்களின் வாதங்களை எளிதில் உடைக்க முடிந்தது. இந்த வழக்கு மார்ச் 26 அன்று மீண்டும் எடுக்கப்படும்.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் கடல்பகுதி கடற்படையின் பூரண கட்டுப்பாட்டில் அன்றைய காலத்தில் இருந்தது. பல ஆயிரக்கணக்கானோர் அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்டனர்.

முகமாற்ற ஆட்சி மாற்றம் மூலம் மக்களிற்கு, நீதி கிடைக்கமாட்டாது. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாது. ஆட்சியாளர்கள் தமது வர்க்கத்தை பாதுகாக்க எதையும் செய்வார்கள். தமக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்வார்கள்.