வேலையில்லா பட்டதாரிகள், அரசு கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

2 (1)

வேலையற்ற பட்டதாரிகளிற்கு, அரசுத் தலைவர்களால்

வேலை வழங்குவதாக கொடுத்த தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி இன்று (21) கொழும்பில் உள்ள தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு முன்னால் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது.

35000  பட்டதாரிகள் பல ஆண்டுகளாக  வேலையற்ற நிலையில் காணப்படுகின்றனர்.  ஆனால் நாடு முழுவதும் பல துறைகளில் வேலையாட்கள் நிரப்பபடாமல் பல இடங்கள் காலியாக இருக்கின்றன என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.