வைத்தியசாலைகளில் மருத்துவ வாயு வழங்கல் டெண்டர் பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் ராஜித மீது குற்றச்சாட்டு !

medical-gas

வைத்தியசாலைகள்  நடவடிக்கைகளுக்கு  தேவையான  மருத்துவ  வாயு  வழங்கல்  சம்பந்தமான  டெண்டர்  கேஸ் வேர்ல்ட்  நிறுவனத்திற்கு  வழங்கியதை   எதிர்த்து  சிலோன்  ஆக்ஸிஜன்  நிறுவனம்  சுகாதார  அமைச்சர்  ராஜித  சேனாரத்ன , சுகாதார  அமைச்சு  செயலாளர்  உட்பட  பொறுப்பானவர்களுக்கு   எதிராக  உயர் நீதிமன்றம்  சென்றுள்ளது.

மருத்துவ  வழங்கல்  இடையே  நோயாளிகளுக்கு   ஆக்ஸிஜன்  வழங்கல்  மற்றும்  மயக்கமுறச்செய்தல்   போன்ற  சத்திர  சிகிச்சை  நடவடிக்கைகளுக்கு  தேவையான  வாயுக்கள்  வகையை  வழங்கல் , வாயு  களஞ்சிய படுத்தலை  மேற்கொள்ளல்  மற்றும்   உரித்தான  சகல  சேவைகள்  தொடர்பான   சுகாதார  அமைச்சின்  விலை  மனு  கூறியபின்   அதற்காக  இரண்டு  விலை  மனுக்கள்  மட்டுமே  கிடைத்துள்ளன . சிலோன்  ஆக்ஸிஜன் கம்பனி  80 வருடங்களாக  வைத்தியசாலைகளுக்கு  வாயு வகைகளை  வழங்கும்   வழங்குநர்  என்பதை  தமது  முறைப்பாட்டில்  உயர்  நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது  .

இருந்தாலும்  அண்மையில்  வியாபார   நடவடிக்கைகளை  ஆரம்பித்த  குளோபல்  கேஸ்  கம்பெனியினால்  முன்வைத்த  விலை  மனுவை  டெண்டர்  சபையால்   ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  அந்த  நிறுவனம்  தொடர்பாக   எவ்வித  கணிப்பீடும்  இன்றி  என  சிலோன்  ஆக்ஸிஜன்  கம்பனி  குற்றம் சாட்டுகிறது.

இதனிடையே  குளோபல்  கேஸ்  கம்பனி  தொடர்பாக  நாம்  தேடிப்பார்த்தபோது  அதன்  வலைத்தளம்   இன்னும்  செயற்பாட்டில்   இல்லை  என்பது  தெரியவந்தது.

 

gas-world-web-under-construction