வைத்தியர் ஒருவரை தருமாறு கேட்டு கற்பிணித்தாய்மார்கள் எதிர்ப்பில் !

-Mannarama

மன்னார் ஆதார வைத்தியசாலைக்கு மகப்பேற்று வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி இன்று (8) திகதி கற்பிணித்தாய்மார்கள் அந்த வைத்தியசாலைக்கு முன்னால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மன்னார் வைத்தியசாலை எதிரில் வீதியில் அமர்ந்து இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த வைத்தியசாலையில் கடந்த 5 மாதங்களாக மகப்பேற்று வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தால் வைத்தியசாலைக்கு வரும் கற்பிணித்தாய்மார்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதை காரணமாக இந்த எதிர்ப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாடு முழுக்க ஊடக கண்காட்சிகளை செய்து மக்கள் பணத்தை அழித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் குறைந்த பட்சமாக அத்தியாவசிய சேவைகளைக்கூட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இந்த செயற்பாட்டில் நன்கு புலப்படுகிறது.

Leave a Reply