வொஷிங்டன் கியூப தூதரக அதிகாரிகள் 15 பேர் வெளியேற்றப்படுவர் !

cuba3

ஐக்கிய  அமெரிக்க   தூதரக  நடவடிக்கைகளில்  ஈடுபட்ட   தூதரக  அதிகாரிகள்  15 பேரை  உடனடியாக  தமது  நாட்டிலிருந்து  வெளியேறுமாறு   ட்ரம்ப்  நிர்வாகம்  கட்டளை  இட்டுள்ளதாக  வெளிநாட்டு  ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

7 நாட்களுக்குள்  இந்த  அதிகாரிகள்  ஐக்கிய  அமெரிக்காவில்  இருந்து  வெளியேறவேண்டுமென்று  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  அறியப்படுகிறது.  கடந்த  வாரம் கியூபாவின்  ஹவானா  நகரில்  அமைந்துள்ள  அமெரிக்க  தூதரக  காரியாலயத்தில்  கடமை புரிந்தவர்களில்  அரைவாசி  பேர்  மீண்டும்  அமெரிக்காவுக்கு  அழைக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு  ஹவானாவில்  உள்ள  அமெரிக்க  தூதகரத்தில் கடமை புரியமுடியாது  என்று  கூறியிருப்பது  , தாங்கிக்கொள்ள  முடியாத  மெல்லிய  ஒலி  எழுப்படுவதாகவும்   அதனால்  தமது  சேவையாளர்களின்   சுகாதாரத்திற்கு  கேடு  விளைவிப்பதாகவும்  என்ற   குற்றச்சாட்டின்  பின்பே.

ஆனால்  இது  தொடர்பாக  கியூப  அதிகாரிகள்  தமது  நாட்டில்  அவ்வாறான  எந்த  செயற்பாடும்  இல்லை   என்று  கூறியுள்ளனர்.