Posted on 10.04.2020 by Farook in Foreign News with 0 Comments
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கொரோனா தொற்றியிருப்பதாக நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.
வோல்டர் ரீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலைமை பாராதூரமானதென சில செய்திகள் குறிப்பிட்டாலும், இது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எப்படியிருந்தாலும், அவருடைய நிலைமை பாரதூரமாக இல்லையெனில் அவர் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தே சிகிச்சை பெற முடியுமென செய்திகள் கூறுகின்றன. நிலைமை மோசமாக இருந்தால் மாத்திரமே வோல்டர் ரீட் வைத்தியசாலைக்கு விமான மூலம் அழைத்துச் செல்லப்படுமென கூறப்பட்டிருந்தது. இதன்படி, டிரம்பின் நிலைமை பாரதூமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்க காலையிலிருந்து காய்ச்சலால் அவதிப்படுவதாக ஊNN செய்திச் சேவை கூறுகிறத.