Posted on 09.13.2021 by Farook in Sports News with 0 Comments
அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 18 வயதான இளம் வீராங்கனை எம்மா ராடுகானு பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது. சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் இளம் வீராங்கனைகளான இங்கிலாந்தின் எம்மா ராடுகானு- கனடாவின் லேலா பெர்னாண்டஸ் இடையே பலப்பரீட்சை நடந்தது.
இருவரும் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இதில் எம்மா ராடுகானு 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி 51 நிமிடங்கள் நடந்தது. பட்டத்தை வென்றுள்ள 18 வயதான எம்மா ராடுகானு, தகுதி சுற்றில் விளையாடி முதன்மை சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இதன் மூலம் தகுதி சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய முதல்நபர் என்ற பெருமையை எம்மா ரடுகானு பெற்றார்.