සිංහල
English
Contact
Thursday 4th June 2020    
அரசியலமைப்பை மதியுங்கள்! – அவுஸ்திரேலிய இலங்கையர்கள் « Lanka Views

அரசியலமைப்பை மதியுங்கள்! – அவுஸ்திரேலிய இலங்கையர்கள்கொரோன தொற்றுநோய் காலத்தில் சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு மதிப்பளித்து அரசியலமைப்பை பின்பற்ற வேண்டுமென ‘இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரோலிய ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்துகிறது.

தொற்று நோய் பரம்பல் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலுக்காக மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில், மேற்படி அமைப்பானது மே மாதம் 8ம் திகதி  அரசாங்கத்திற்கு மூன்று பக்க கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

கடிதத்தின் சாராம்சம்-

“கோவிட் – 19 வைரஸ் அதிகமதிகமாக பரவி வரும் சூழலில், உலக சுகாதார அமைப்பானது உலக அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில் அதனை பொறுட்படுத்தாத இலங்கை ஜனாதிபதி, அரசியலமைப்புச் சட்டப்படி முதல் நாளிலிலேயே, அதாவது, மார்ச்ச 2ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சுகாதாரப் பிரச்சினையை அறிந்த  இலங்கை தேர்தல் ஆணையம் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவிருந்த தேர்தலை ஜூன் 20ம் திகதி வரை பிற்போட்டது. பல்வேறு அரசியல் துறைகளைச் சார்ந்த மக்கள் மத்தியில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து பாரதூரமான பிரச்சியொன்று எழுந்துள்ளது.

தற்போதைய இடைக்கால அரசாங்கமானது பொதுத் தேர்தலில் தனக்கு இலாபம் கிடைக்கக் கூடியவாறு சுகாதார நெருக்கடியை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்துவது தெரிகிறது. ஆட்கொல்லி வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களது வெற்றியை உறுதி செய்துக் கொள்வதற்காக வீடு வீடாகச் சென்று பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், கூட்டங்களை நடத்துவதமாக உள்ளனர். அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் நாடு பூராவும் கோவிட் -19 நிவாரணப் பொதிகளை பகிர்ந்தளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நாட்டில் மிகவும் வறிய மற்றும் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களிடமிருந்து அரசியல் லாபங்களை பெற்றுக் கொள்வதற்காக  மேற்கொள்ளப்படும் இந்த மோசமான வற்புறுத்தலானது – உண்மையிலேயே, லஞ்சம் வழங்குவதாகும் என்பது அநேகருக்குத் தெரியும். அவ்வாறு சந்தேகத்திற்கிடமான நிவாரணங்கள் மற்றும் பணம் வழங்கும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பலர் பொலிஸாரின் கடுமையான பதிலடிகளுக்கு ஆட்பட்டனர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கமானது எப்போதுமே ” மக்களினது, மக்களுக்கான அரசாங்கம்’ என்பதாகவே இருக்க வேண்டும். மக்களை முதன்மையாக வைக்கக் கூடிய வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது. அரசாங்கமானது, ஆளுகைக்குட்பட் மக்களின் விருப்பத்துடன் நிலைப்பது அத்தியாவசியமாகும். இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அரசாங்கத்திற்கு சார்ப்பாக வாக்களித்தவர்களுக்கு மாத்திரமல்ல, ஏனைய வாக்காளர்களையும், அவர்களது பிரதிநிதிகளையும் மதிக்கும் அரசாங்கமாக இருப்பது அத்தியாவசியமாகும்.

அரசியலமைப்பின் 70 (5) உறுப்புரையின்படி, ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், புதிய பாராளுமன்றம் கூடும் தினம் நியமிக்கப்பட  வேண்டுமெனவும், அது, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஒரு தினமாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்றம் 2020 மே 2ம் திகதிக்கு முன்னர் கூட்டப்படல் வேண்டும். தேர்தல்  ஜூன் 20ம் திகதிக்கு பிற்போடப்பட்ட கையோடு, இது , அரசியலமைப்பு ரீதியிலான சிக்கலுக்கு வழி சமைத்துள்ளது. அரசியலமைப்பு ரீதியில் சரியான நடவடிக்கையொன்றை ஏகமனதாக எடுப்பதற்காக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சகல அரசியல் கட்சிகளும் கோரியுள்ளன. மாத்திரமல்ல, 148வது உறுப்புரையின்படி, ‘ அரச நிதி சம்பந்தப்பட்ட முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்திற்கே உண்டு. அரச சேவைகளை நடாத்திச் செல்லவும், உருவாகியுள்ள பாரதூரமான சுகாதார நிலைமைக்கான செலவீனங்கள் குறித்தும்  பேச வேண்டிய இடம் பாராளுமன்றமாகும் என்பதால், அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டி குறைநிறப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்து பெரும்பான்மையின் அனுமதியோடு நிறைவேற்றிக் கொள்ளல் வேண்டும். அரசியலமைப்பின் 70 (7) உறுப்புரை அதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.

ஆகவே, ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இதுதான். என்றுமில்லாதவாறு சுகாதார மற்றும் பொருளாதார அழிவுகளுக்கு முகம் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டியது தேசபக்த தலைவர்களது  பொறுப்புடமையாகும்”

ஒப்பம்- விரிவுரையாளர் லயனல் போபகே,

தலைவர் – இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய ஒத்துழைப்பு

மெல்பர்ன்- அவுஸ்திரோலியா

 
Related News