Posted on 01.12.2021 by Farook in Local News with 0 Comments
2019 உயர்தர வெட்டுப் புள்ளிகள் பிரச்சினையால் அநீதிக்குள்ளான சகல மாணவர்களையும் பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்குமாறு கோரி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவ்வே ஜினரதன தேரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலவச கல்விக்கான மாணவர் மக்கள் அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.