සිංහල
English
Contact
Thursday 4th June 2020    
ஆசிரியர் – அதிபர்  சேவையின்  சம்பள   முரண்பாடுகளை   இல்லாதொழிக்கும்  போராட்டம் ! « Lanka Views

ஆசிரியர் – அதிபர் சேவையின் சம்பள முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் போராட்டம் !இலங்கையின் கல்வி வரலாற்றில்  அவ்வப்போது  பல  போராட்டங்கள் , தமது  உரிமைகளுக்காக   ஆசிரியர்களினாலும்  அதிபர்களினாலும்  முன்னெடுக்கப்பட்டாலும்  அது பாரிய போராட்டமாக  வெடிக்கவில்லை.  கல்வி புலத்தில்  பல்வேறு குறைப்பாடுகள் , பிரச்சினைகள்  காணப்பட்டாலும் , மாணவர்களின்  எதிர்காலம், அவர்களின் கல்வி  பதிப்படையக்கூடாது  என்ற  உயரிய  சிந்தனையால் , ஆசிரியர்கள், அதிபர்கள்  தமது  உரிமைகளையும்  விட்டுக்கொடுத்து   போராட்டங்களை  கைவிட்டு  மீண்டும்  வழமைபோல்  தம்  பணியில் ஈடுபடுகின்றனர்.  இதை  ஆட்சியில் உள்ள  அரசாங்கங்கள்  தமக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொண்டன . பல்வேறு சந்தர்ப்பங்களில்  ஆசிரியர்  தொழிற்சங்கங்களின்   ஒற்றுமை இன்மை காரணமாக  ஆசிரியர்களின் தொழிற்சங்க  நடவடிக்கைகள்  காட்டிக்கொடுக்கப் பட்டுள்ளன.

வேலை  நிறுத்தப் போராட்டங்களும்,  ஊடகங்களின் வகி பங்கும் .

வேலை  நிறுத்தப் போராட்டங்களினது  உண்மை  நிலைமைகளையும்   அதில்  பொதிந்துள்ள  யதார்தங்களையும்  ஊடகங்கள்  அப்படியே பதிவு  செய்வதில்லை .  ஊடக நிறுவனங்களின்  அரசியல்  நிகழ்ச்சி  நிரலுக்கு  ஏற்ப  அவை  திரிபு படுத்தப்படுகின்றன . குறிப்பாக  சுகாதார  துறை சார்ந்த  தொழிற்சங்க  நடவடிக்கைகளின்  போது , வைத்தியர்களின் இந்த  தொழிற்சங்க  நடவடிக்கை  காரணமாக  பல  நோயாளிகள்  பாதிக்கப் பட்டதாக  பெரிய அளவில்  நேரடி  ஒளி ,ஒலி  பரப்பு  செய்து  வைத்திய  சங்கங்களுக்கு  சேறு பூசும்  வேலையை  சில  தனியார், அரச  ஊடங்கள்  சிறப்பாகவே  செய்தமையை  எம்மால்  அவதானிக்க  முடிந்தது.  ஆனால்  சுகாதார  துறையில்  எவ்வளவோ  பிரச்சினைகள்  இருந்தாலும் இந்த  ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை . அதேபோல்  தான்  கல்வித்துறையில்  இவ்வாறான தொழிற்சங்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும்  போது , மாணவர்களின்  கல்வி  நடவடிக்கைகள்  முற்றுமுழுதாக  பாதிப்படைந்ததாக , அவர்களின்  எதிர்காலமே  இல்லாமல்  போனதுபோல் அறிக்கை  படுத்துகின்றனர்.  இந்த  போராட்டங்களின்  யதார்த்தங்களை  மக்களுக்கு  போய்சேரும்  வகையில்  ஒன்றும் செய்வதில்லை .

மார்ச்  13  சுகயீன  விடுமுறை .

கடந்த  மார்ச் மாதம்  13 ந்  திகதி  நாடு  தழுவிய  ரீதியில்  அதிபர்கள் , ஆசிரியர்கள்  சுகயீன  விடுமுறை  அறிவித்து , பாடசாலையில்  கற்றல் , கற்பித்தல்  செயன்முறையை  முற்றாக   செயலிழக்க  செய்தனர்.  இது வெறும்  அடையாள வேலை  நிறுத்தம்  மட்டுமே. எதிர் காலத்தில்  பல்வேறு வடிவங்களில்  இப் போராட்டங்கள்  முன்னெடுக்கப்படும் என்று  13 ந்  திகதி  கொழும்பு  கோட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்ட  கூட்டத்தில் இந்த சுகயீன  விடுமுறையை அறிவித்து , அரசாங்கத்திற்கு  சிவப்பு வெளிச்சத்தை  காட்டிய  18  தொழிற்சங்களின்  பிரதிநிதிகள்  சூளுரைத்தனர் .

இதுவரை  ஆட்சியில்  இருந்த  அரசாங்கங்கள்  1997  முதல்   இருந்து  வரும்  பீ. சீ  பெரேரா  சம்பள  ஆணைக்குழுவால்  உருவாக்கப்பட்ட  ஆசிரிய – அதிபர்  சம்பள  முரண்பாட்டை  தீர்ப்பதற்கான  எந்தவொரு  நடவடிக்கையையும்  இதுவரை  மேற்கொள்ளவில்லை . அரச  சேவைகளில் அடிமட்டத்திற்கு  தள்ளப்பட்டிருப்பது  ஆசிரிய  சேவையாகும்  உலக  நாடுகளில்  ஆசிரியர்கள்  பெரும் சம்பளத்துடன்  ஒப்பிடும்போது  மிக  குறைவான சம்பளம்  பெறுவது  இலங்கை ஆசிரிய சேவையில் உள்ள  ஆசிரியர்களாவர் .

6/2006 சுற்றறிக்கை  மூலம்  காலனித்துவ  முறைக்கு  ஏற்ப  ஆசிரியர்  சேவையின்  பதவி நிலைகளை  பிரித்து , ஆசிரிய  சேவை – அதிபர் சேவையை  இரண்டாம்  மட்டத்திற்கு  தள்ளியது. அது  ஆசிரிய சேவையின்  நிலையை இன்னும் கீழ் நிலைக்கு  கொண்டு போனது. 1997 இன்  பின்  15/2003, 9/2004,  6/2006 , உடன் 3/2016 சுற்றறிக்கைகள்  வெளிவந்தாலும்  ஆசிரிய -அதிபர்  சம்பள  பிரச்சினைக்கு  இன்னும் தீர்வு  கிடைக்கவில்லை . பீ.சீ .பெரேரா  சம்பள ஆணைக் குழுவால்  உருவாக்கப்பட்ட  சம்பள  முரண்பாட்டை  6/2006 சுற்றைக்கை இன்னும் மோசமான  நிலைக்கு  இட்டுச் சென்றுள்ளது.

ஆசிரியர்களின்  கோரிக்கைகள்

2007,2008 ஆம்  ஆண்டுகளில்  க.பொ .த  உயர் தர  பரீட்சை  வினாத்தாள்  திருத்துவதை  புறக்கணித்தும் , பல்வேறு போராட்டங்கள்  மூலமும்  சம்பள  முரண்பாட்டைத்  தீர்ப்பதற்காக  அரசுக்கு  பல  அழுத்தங்களை கொடுத்தனர்.  2018.08.20  ஆம் திகதி 2085/1 அதி விசேட வர்த்தமானி  அறிவித்தல் மூலம்  ஜனாதிபதி , எஸ். ரனுக்கே  தலைமையில்  சம்பள முரண்பாடுகளைத்  தீர்ப்பதற்கான  விசேட  ஆணைக்குழுவை  உருவாக்கினார்.  அந்த  ஆணைகுழுவுக்கு  ஆசிரிய  சங்கங்கள் தனித்தும், இணைந்தும்  தமது  முன்மொழிவுகளை  முன்வைத்தன . ஆசிரிய – அதிபர்  தொழிற்சங்கங்களின்  அழுத்தத்தினால்  பீ.சீ.பெரேரா  சம்பள ஆணைக்குழுவால்  உருவாக்கப்பட்ட சம்பள முரண்பாட்டை  முழுமையாக தீர்க்கும் வரை  இடைக்கால  சம்பள யோசனையை  அதிபர்- ஆசிரியர் சேவகளுக்கான  ஏனைய கொடுப்பனவுகளுடன்  ‘ரனுக்கே ‘  ஆணைக்குழுவுக்கு  2018 செப்டம்பர் மாதம்  கல்வி அமைச்சின்  செயலாளர்  சமர்ப்பித்தார். கல்வி  அமைச்சு  குறைந்தபட்சம்  அந்த  யோசனையைக்கூட  இதுவரை செயற்படுத்தவில்லை .

இவற்றின்  அடிப்படையில் , ஆசிரியர்- அதிபர்களின் சம்பள  முரண்பாடு  உட்பட பல்வேறு அழுத்தங்களுக்கு  எதிராக  2019 மார்ச்  13 புதன் கிழமை ஆசிரியர்- அதிபர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து  சுகயீன லீவு  அறிவித்தனர்.

 

1997 இல்  பீ.சீ .பெரேரா சம்பள ஆணைக்குழுவால்  உருவான  சம்பள  முரண்பாடு

3/2016 சுற்றறிக்கைக்கு  அமைவாக .

 

 

ஆசிரிய  சேவை

 

அதிபர்  சேவை
 

தரம்

 

தற்போதைய சம்பளம் 3/2016 அமைவாக  (2019 வருடத்திற்கு) முரண்பாடு தீர்ந்த பின்  கிடைக்கவேண்டிய சம்பளம் தரம் தற்போதைய சம்பளம் 3/2016 அமைவாக  (2019 வருடத்திற்கு)

 

முரண்பாடு தீர்ந்த பின்  கிடைக்கவேண்டிய சம்பளம்
 

1

 

2

 

3

 

 

 

40,310.00

 

35,135.00

 

29,860.00

 

68,291.00

 

56,111.00

 

42,679.00

 

1

 

2

 

3

 

41,543.00

 

35,906.00

 

32,636.00

 

68,291.00

 

56,111.0

 

42,679.00

 

ஆசிரிய  சேவை தரம்  3-1, 3-2   சம்பளங்கள்  இதற்கு அமைவாக வரும்.

13 ந்   அதிபர் – ஆசிரியர்  போராட்டத்தின்போது  முன்வைத்த  கோஷங்கள்  .

பீ.சி.பெரேரா சம்பள ஆணைக்குழுவால்  உருவாக்கப்பட்டு,  லயனல் பெர்னாண்டோ  அணைக்குழுவால்  தீவிரப்படுத்தப்பட்ட  சம்பள முரண்பாட்டை உடன் நீக்கி, ஆசிரியர் – அதிபர் சம்பளத்தை அதிகாரி !

ஆசிரியர்கள் மீது மேலதிக  அழுத்தங்களைக்  கொடுக்கும்  படிவங்கள் நிரப்புதல் , அறிக்கை தயாரித்தல்  உட்பட சகல   அழுத்தம்  கொடுக்கும் செயற்பாடுகளையும்  உடனடியா நிறுத்து !

மொத  தேசிய உற்பத்தியில்  6 % கல்விக்கு ஒதுக்கு !

இந்த  போராட்டத்தில்  கலந்துகொண்ட  தொழிற்சங்கங்கள்.

ஒன்றிணைந்த  ஆசிரியர்  சங்கம் , இலங்கை  ஆசிரியர் சங்கம் , சுயாதீன கல்வி ஊழியர்  சங்கம்,  சுயாதீன   இலங்கை  முற்போக்கு ஆசிரியர்  சங்கம்,  இலங்கை  முற்போக்கு ஆசிரியர்  சங்கம்,   சிறிலங்கா  சுதந்திர  ஆசிரியர் சங்கம் ,  தரம்  பெற்ற  அதிபர்  சேவை சங்கம்,  ஆசிரியர் விடுதலை முன்னணி ,  மலையக  ஆசிரியர்  முன்னணி, அகில  இலங்கை  ஐக்கிய ஆசிரியர் சங்கம் , கல்வி உத்தியோகத்தர்  சங்கம் , சிறிலங்கா  தேசிய  ஆசிரியர் சங்கம் ,சிறிலங்கா  தேசிய  அதிபர்  சங்கம்,  தேசப்பற்று  ஆசிரியர் சங்கம்,  தேசிய ஆசிரியர்  சபை,  அகில இலங்கை பட்டதாரி  ஆசிரியர்  சங்கம்,  விவசாய மனைப்பொருளியல்  டிப்ளோமா  ஆசிரியர் சங்கம்,  சிறிலங்கா  கல்வி சமூக சம்மேளனம் (SLECO).

இவ்வாறு  கல்வி புலத்தில்  பல்வேறு  குறைபாடுகள், பிரச்சினைகள்  உள்ள நிலையில்  கல்விசார்  18  தொழிற்சங்கங்கள்,  தமது  உரிமைகளுக்காக   போராட்டத்தில் இறங்கியுள்ளன .

ஒரு புறம் பாடசாலைகளில்  ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பௌதீகவளப்பற்றாக்குறை   காணப்படுகிறது . அரசாங்கத்திடம்  இவற்றுக்கு  தீர்வு  இருக்கின்றதா  என்பது  சந்தேகமே.

 

ஆசிரியர்  வெற்றிடங்களும் , வேலை இல்லா  பட்டதாரிகளும் .

வேலை இல்லா  பட்டதாரிகள்  வீதியில்  இறங்கி  வருடக்கணக்கில்  போராடிக்  கொண்டிருக்க,  பாடசாலைகளிலோ  ஆசிரியர்  வெற்றிடம்  அப்படியே  காணப்படுகிறது.  இந்த  நிலையில்  சில  மாகாண சபைகள்  ஓய்வு  பெற்ற  ஆசிரியர்களை  திரும்பவும் ஒப்பந்த   அடிப்படையில்   பணிக்கு  அமர்த்த  நடவடிக்கை  எடுத்து வருகிறது.  அதே நேரத்தில்  மலையக  பாடசாலைகளில்  காணப்படும்  வெற்றிடங்களை  நிரப்ப   இந்தியாவில்  இருந்து  ஆசிரியர்களை  இறக்குமதி  செய்யப்போவதாக  முன்னாள்  கல்வி  இராஜாங்க  அமைச்சர்  கூறியுள்ளார்.    இதனூடாக  அரசாங்கத்தின்  கல்வி  தொடர்பான  அணுகுமுறையை  புரிந்துகொள்ளமுடிகிறது.

மொத்த  தேசிய  உற்பத்தியில்  கல்விக்கு  6 %  ஒதுக்குமாறு  மாணவர் மக்கள்  இயக்கங்கள்  வலியுறுத்தி  வருகின்றன.  இந்த   போராட்டத்தில்  பொது மக்களும்  கலந்து  ஆசிரியர்கள் , அதிபர்களின்  சாதாரண  கோரிக்கைகளை  வென்றெடுக்க  முன்வரவேண்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது .  ஆசிரியர்கள்  தெளிவான  மனநிலையில்  இருந்தால்  தான்  மாணவருக்கு  சிறந்த  கல்வியை  வழங்கமுடியும் .  எனவே  பெற்றோரும்  இப் போராட்டத்திற்கு  தமது  ஆதரவை  வழங்கி  தமது  பிள்ளைகளின்  எதிர்காலத்தை  வளப்படுத்த  முன்வரவேண்டும்.

 
Related News