Posted on 04.16.2022 by Farook in Local News with 0 Comments
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது முகாமிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவாயிலுக்கு முன்பாக இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலையிலிருந்து காலி முகத்திடல் பாதையில் போட் சிட்டிக்கு அருகாமையில் நடைபாதைக்கு இடையூறாக சுமார் 10 இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வன்முறையல்லாத அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு நடுவில் இராணுவத்தை இறக்குமளவுக்கு அரசாங்கம் ஹிட்லரை போன்று நடந்து கொள்ளப் போகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது,