සිංහල
English
Contact
Sunday 20th May 2018    
இரண்டு  வருடங்களாக மௌனம்  காத்த  மைத்ரி  இப்போது  எழுந்துள்ளார்,  இவை  அனைத்தும்  மக்களை  ஏமாற்றவே –   குமார் குணரட்ணம் « Lanka Views

இரண்டு வருடங்களாக மௌனம் காத்த மைத்ரி இப்போது எழுந்துள்ளார், இவை அனைத்தும் மக்களை ஏமாற்றவே – குமார் குணரட்ணம்நேற்று (25)  ஹிங்குரக் கொடையில் நடைபெற்ற  பிரச்சார  கூட்டத்தில்  முன்னிலை  சோஷலிஸக்  கட்சியின்  அமைப்பு  செயலாளர்  குமார்  குணரட்ணம் அவர்கள்  கூறியதாவது  இந்த   தேர்தல்  செயற்பாடுகளில்   செய்யும்   ஏமாற்று அரசியல் தொடர்பில்  மக்களை  விழிப்பூட்டுவது தமது  பொறுப்பாகும் ,அதனால்  வேறு  தேர்தல்களில்  போட்டியிடுவது  போல் மக்களின்  முன் செல்வதற்கு  கட்சி தீர்மானித்தது  என்று  கூறினார்.

இப்போது  மைத்திரிபால  சிறிசேன  ஊழல்  துஸ்பிரயோகத்திற்கு  எதிரான  முன்மாதிரி  தலைவராக  தன்னை  காட்ட முயற்சிக்கிறார்.  இரண்டு  வருட காலமாக  எவ்வித  பேச்சும்  இல்லாத  பிணை முறி  ஊழல் தொடர்பாக  இப்போது  நடவடிக்கை  எடுக்கப்போவதாக  கூறுகிறார்.   இவ்வளவு  காலத்திற்கு  பின் ஏன்  அவ்வாறு  கூறுகிறார்? அது  வேறொன்றுக்கும்  இல்லை  தேர்தலுக்குக்காக.

2015  ஜனாதிபதி  தேர்தலில் பெட்ரா பெயரளவிலான  பதவிக்கு  அரசியல்  பலத்தை  பெற்றுக்கொள்ளவே. ‘போஹோட்டுவ’  பக்கத்தினரால்  மைத்திரிக்கு   சுமத்தப்படும்  குற்றச்சாட்டில்  ஒரு சவால்  உள்ளது.  ஊழல்  செய்த  ஐக்கிய  தேசிய  கட்சியுடனான கூட்டு  அரசாங்கம்  ஏற்படுத்திக்கொண்டது  தொடர்பான  விமர்சனத்தில்  இருந்து  தப்பித்துக்கொள்ள   தற்போது  ஐ.தே.க. விரோத  நிலைமையை  உருவாக்க  முயற்சிக்கிறார். இரண்டு வருடங்கள்  ஒன்றாக  தின்றதை ,மக்களை  ஏமாற்ற  முடியுமா?

அந்தளவுக்கு  இவர்களின் அதிகார போட்டி   பெரிய  நெருக்கடியை  தோற்றுவித்துள்ளது. இவை அனைத்தும்  அதிகாரத்திற்காக  மக்களை  ஏமாற்றும்  கோஷம்  மட்டுமே.  அது  நாட்டில்  ஜனநாயகத்தை  ஏற்படுத்துவதற்கான  கோஷம் அல்ல.

இப்போது  இந்த  ஊழல்  துஷ்பிரயோகம்  தொடரபாக  ஒன்று  சொல்லவேண்டும் . ஊழல் துஷ்பிரயோகம்  இந்த முதலாளித்துவ முறைமை  இருக்கும் வரை  இல்லாமல் ஆக்க முடியாது. தற்போதுள்ள  ஜநாயக  எதிர்ப்பு  நிலைமை  தொடர்பாக நாங்கள்  2015 ல்   கூறினோம் .  ஜனநாயகம் மற்றும் பொருளாதார  சமத்துவத்தை  ஏற்படுத்த  முடிவது  சோஷலிச  முறைமையில்  மட்டுமே.  அது  தான்  நாங்கள் ஏறுகொள்ளும்  உண்மை.  அதை  இந்த நாட்டு மக்களுக்கு ஓரளவு  தெரியும் . ஏனென்றால்  இந்த  சமூக முறைமையில்  புரையோடிப்போயிருக்கும் ஊழல் துஷ்பிரயோகம்  மற்றும்  நெருக்கடியை அவர்கள்  நன்றாக  அனுபவித்துள்ளார்கள். அப்படியானால்   என்ன  இந்த  சமவுடைமை ?  இந்த சமவுடைமை  உலகத்தினுள்  நடைமுறையில்  உள்ளதா? இந்த முறைமை வெற்றிகரமானதா?  சோவியத் முகாம்  ஏன்  வீழ்ந்தது? ஆம்  நாங்கள்  அதை அறிவோம் . ஆனால்  இந்த  முதலைதுவத்தினுள்  மக்களுக்கு  குறைந்தபட்ச  நிவாரணத்தையாவது  கொண்டுவர , ஜனநாயகம்  மற்றும்  சமத்துவத்தை  ஏற்படுத்த  முடியாது.  அதனால்  நாங்கள்  கூறுகிறோம்  சமவுடைமை  முறைமையை  கட்டியெழுப்படல்  வேண்டும்  என்று.

அப்படியானல்  நீங்கள் கேட்கக்கூடும்  சோஷலிச  முறைமையை  கட்டியெழுப்ப  எவ்வாறு ஆரம்பிப்பது என்று.  நாங்கள்  முகம் கொடுக்கும்  பிரச்சினைகளுக்கு  எதிராக  போராட்டம்  செய்வதில்  தான்  இதை ஆரம்பிக்க வேண்டும் .தேர்தல்  மட்டும் இந்த  நாட்டின்  பிரச்சினைகளை  தீர்ப்பதில்லை.  நாங்கள்  யுத்தம்  செய்யவேண்டும் என்று  இங்கு  சொல்ல வரவில்லை .மக்கள்  அரசியலுக்கு வரவேண்டும் .தேர்தல்  காலத்திற்கு  மட்டுமல்ல.   ஆயுட்காலம்   முழுவதும் அரசியல்  செய்யுங்கள் . இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை  காத்துக்கொள்ள  எமது  வேலை திட்டத்தில்  நீங்களும்  இணையுங்கள். அதற்கு  நீங்கள் பல்கலைக்கழகம்  சென்ற ஒருவராக  இருக்க  தேவை  இல்லை . சுகாதார  துறையில்  வேலை செய்யவும்  தேவை இல்லை . அதற்காக  செய்யும் எதிர்ப்புகளில் பங்குபற்றவும்  தேவை இல்லை .  அதற்காக  உங்களுக்கு  ஊரில்,  வீட்டில் கூட  இணைந்துக்கொள்ளலாம் .  அதற்காக  எந்த  அர்ப்பணிப்பையும்  செய்ய  முன்னிலை  சோஷலிக் கட்சி  தயாராகவிருக்கிறது.

எமது  அரசியலை  அனைத்து மக்களின்  வெற்றிவரை  தொடர்ச்சியாக  செய்வதோடு ,இது  தேர்தலை மையப்படுத்தி , வாக்குகளை  அடிப்படையாகக்கொண்ட   அரசியலல்ல. அதனால்  எங்களுக்கு  தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது  போட்டி  இடாததோ  ஏற்புடையது அல்ல.  நாங்கள்  இந்த தேர்தல்  சந்தர்ப்பத்தை  தேர்தெடுத்தது  இலங்கை மக்களை  விழிப்பூட்டுவதற்கே.  விசேடமாக  இந்த தேர்தல் செயற்பாடுகளினுள்ளே  செய்யும்  அரசியல் ஏமாற்று  தொடர்பாக  மக்களை  அறிவூட்டுவதற்கே  .

ஐ.தே. க. ,ஸ்ரீ.சு.க., ஜெ,வி.பி,  போன்று  தமிழ்  தேசிய  கூட்டமைப்பு , முஸ்லீம் காங்கிரஸ்  போன்ற  பல்வேறு  அரசியல்  காட்சிகள்  இந்த  ஏமாற்று  வேலைகளை பின்பற்றுகின்றன. தமக்கு  அதிகாரத்தை  வழங்கினால்  இந்த  பிரதேசத்தை  சொர்கபுரியாக்குகிறோம், பிரதேசத்தின்   சகல  பிரச்சினைகளையும்   தீர்க்கிறோம்  என்று அதிகாரத்திற்காக  செய்யும் இந்த  அரசியல் உள்ளே   அவர்கள்  கதைக்காத உண்மையான  பிரச்சினை  தொடர்பாக  பொது மக்களை  அறிவூட்டுவதற்காகவே  நாங்கள்  தேர்தலில்  போட்டியிடாவிட்டாலும்  தேர்தல்  சமயத்தில் இவ்வாறான  பிரச்சார  செயற்பாட்டை  செய்கிறோம். .என்று  குமார்  குணரட்ணம்  மேலும்  கூறினார்.

 

higurakgoda-crowd
Related News