සිංහල
English
Contact
Sunday 26th September 2021    
இலங்கையின் நிலைமை கவலையளிக்கிறது! –ஐ,நா. மனித உரிமை ஆணையர் « Lanka Views

இலங்கையின் நிலைமை கவலையளிக்கிறது! –ஐ,நா. மனித உரிமை ஆணையர்



இலங்கையில் மனித உரிமைகளை நடமுறைப்படுத்தல் மற்றும் பொறுப்புடமை சம்பந்தமாக மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் கூறுகிறார். உலக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நேற்று (13) திறந்து வைத்தன் பின்னர் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விசேடமாக இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமான நிலைமைகள் எதிர்க்காலத்தில் முன்னேற்றமடையக் கூடுமெனவும் அவர் கூறினார்.
அவருடைய உரையின் சுருக்கம்;

“இலங்கை சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவை மற்றும் எனது இறுp அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட போக்குகள் மற்றும் பிரச்சினைகளை உள்ளீடு செய்ய முடிந்தமை குறித்து நான் மகிழச்சியடைகிறேன்.

இந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கம் அனுப்பிய உள்ளீடுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை குறித்தும் நான் கவனம் செலுத்தியுள்ளேன். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொறுப்புடமையை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதுடன், தேவையான நிறுவனம்சார் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவம் இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

2021 ஜனவரியில் அமைக்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையத்தின் அறிக்கைகளை துரிதமாகவும் பகிரங்கமாகவும் வெளியிடுவதை நான் ஊக்குவிக்கிறேன். இந்த வருட இறுதிக்குள் அதன் விசாரணையை நிறைவு செய்யுமென எதிர்ப்பார்க்கிறேன்.

இலங்கையில் சிவில் சமூகத்துடனான விரிவான கலந்துரையாடல் மற்றம் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கிறேன். துரதிஷ்டவசமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல், நீதித்துறையின் துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்து நடைபெறுவது மாத்திரமல்ல, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மதத் தலைவர்கள் போன்றோர் அடக்குமுறை செய்யப்படுகிறார்கள்.

சிவில் சமூகக் குழுக்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. பல மனித உரிமை வழக்குகளில் நீதித்துறையின் நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். 2008-2009ம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட மீது தொடுக்கப்பட்ட வழக்கை தொடர முடியாதெனக் கூறிய சட்டமா அதிபரின் முடிவும் இதில் அடங்கும். 2019ல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களும், மதத் தலைவர்களும் நீதி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2011ல் நடந்த கொலை சம்பந்தமாக குற்றவாளியாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். இதனால் சட்டத்தின் ஆதிக்கம் மற்றும் நீதியின் மீதுள்ள நம்பிக்கை சிதையக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களின் உயிரிழப்புகள், போதைப் பொருள் குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகங்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான சித்திரவதைகள், நடத்தைகள் குறித்து நான் கவலைப்படுகிறேன்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யும் தனது நோக்கத்தை அரசாங்கம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதற்காக அமைச்சரவை துணைக்குழுவொன்றையும் அமைத்துள்ளது. என்றாலும், மக்களை கைது செய்யவும், தடுத்து வைக்கவும் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா எந்தக் குற்றச்சாட்டுமின்றி 16 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் எந்தக் குற்றச்சாட்டுமின்றி 2020 மே மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே இந்தச் சட்டத்தை உடனடியான நீக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்”