Posted on 01.29.2021 by Farook in Art with 0 Comments
இலங்கை தமிழ் இலக்கதியத் துறையின் முன்னோடியான டொமினிக் ஜீவா நேற்று (28) காலமானார்.
94 வயதுடை இந்த மூத்த எழுத்தாளர், ‘மல்லிகை’ என்ற பெயரில் தமிழ் முற்போக்கு இலக்கிய சஞ்சிகையொன்றை வௌியிட்டு தமிழ் வாசகர்களுக்கு இலக்கிய தாகத்தை ஏற்படுத்தியவராவார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழ்மை. வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகளை எழுதியதோடு, பல புனைக் கதைகளையும் எழுதியுள்ளார்.
1960களில் ‘தண்ணீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வௌியிட்டு அரசின் சாகித்தி யபரிசையும் வென்றதோடு, தமிழ் இலக்கிய சமூகத்தின் பாராட்டுதலையும் பெற்றவராவார். சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது ஆக்கங்களையும் தமிழ் சமூகத்திற்கு எடுத்துச் செல்வதில் வழிகாட்டியாக இருந்தார்.
கம்யூனிஸக் கட்சியின் உறுப்பினராகச் செயற்பட்ட அவர் இலங்கை தமிழ் இலக்கியத்தின் ‘மக்ஸிம் கோர்கி’ என அழைக்கப்பட்டார்.
1983ல் யுத்தம் தொடங்கிய பின்னர் எல்.டீ.டீ.ஈ. அமைப்பின் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பிற்கு வந்த அவர் ‘மல்லிகை’ சஞ்சிகையை தொடர்ந்து வௌியிட முயற்சித்தார்.
தமது வாழ்நாளில் சோஷலிஸ வெற்றி சம்பந்தமான எதிர்ப்பார்ப்புடன் தொடர்ந்தும் இலக்கியத் துறையில் ஈடுபட்ட அவர் இன்று எம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டார்.
தற்போதைய பெருந்தொற்று காரணமாக இந்த மாமனிதரின் இறுதிக் கிரியைகளை கட்டுப்பாடுடன் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.