Posted on 07.14.2020 by Farook in Local News with 0 Comments
ரூ. 15,000 த்தை இலஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படட பொலிஸ் பரிசோதகரொருவரை எதிர் வரும் 27ம் தகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட யக்கல பொலிஸில் கடமையாற்றிய மேற்படி பொலிஸ் பரசோதகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
மேற்படி பரிசோதகர்
கம்பஹ நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் சந்தேக நபருக்கு விதிக்கப்பட்டுள்ள பிணை நிபந்தனைகளை தளர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 15,000 ரூபாய் பணத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஆணையத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.