සිංහල
English
Contact
Saturday 4th April 2020    
இளையோருக்கு பொறுப்பு தரும் மக்கள் பங்களிப்பு வேலைத்திட்டம்!- மாற்றத்திற்கான இளைஞர்கள் « Lanka Views

இளையோருக்கு பொறுப்பு தரும் மக்கள் பங்களிப்பு வேலைத்திட்டம்!- மாற்றத்திற்கான இளைஞர்கள்தற்போதைய பேரழிவை எதிர்கொள்வதற்கு மக்கள் பங்கேற்பு முறையொன்றின்பால் வருமாறும், அவ்வாறு வருவதாயிருந்தால் இந்நாட்டு இளைய சமுதாயத்தை சுயமாக பங்களிப்பு செய்ய Youth for CHEnge அல்லது ‘மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பு கூடியளவு தலையீடு செய்ய தயாராக உள்ளதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

அதிக ஆபத்தான பிராந்தியமாக பெயர் குறிப்பிட்டுள்ள  மேல் மாகாணத்திலும், தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள ஏனைய மாகாணங்களிலும் மக்கள் முண்டியடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூடிய முறையொன்று தேவைப்படுகிறது. விலைக்கு வாங்க முடியாத மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமொன்றும் தேவை. அத்தியாவசியப்  பொருட்கள் மற்றும் சேவைகளை வீட்டுக்கே கொண்டுவரும் சிக்கலான காரியத்திற்கு அரச அதிகாரிகளுக்கு மேலதிகமாக இளைஞர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறும் “மாற்றத்திற்கான இளைஞர்” அமைப்பு முன்மொழிகிறது.

Youth for CHEnge அல்லது மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பு வௌியிட்டுள்ள அறிவித்தல் –

கொரோனா தொற்றிய இந்நாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. அதேநேரம் இதுவரை எந்த மரணமும் அறிவிக்கப்படாதது எங்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது. இந்தளவிற்காவது பாதுகாக்கப்பட்டுள்ள இந்நாட்டின் இலவச சுகாதார சேவையையும், அங்கு தொடர்ந்து கஷ்டப்படும் சுகாதார அலுவலர்களின் தியாகத்தையும் நாம் மதிக்க வேண்டும். சிலவேளை நாட்டின் தற்ப வெப்ப நிலைக்கும், நீண்டகால மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கும் முகம் கொடுத்து அவற்றை தாக்குப்பிடிக்கக் கூடிய மரபணு அமைவும் இலங்கை மக்களிடம் இருப்பது நிலைமை மோசமாகாதிருக்கக் காரணமாக உள்ளது.

விசேடமாக தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில்  அரசாங்கம்  முன்னுரிமை வழங்கியதால்  ஏற்கனவே எடுத்திருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாத்திரமல்ல மேலும் நிறைவேற்ற  வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றாமை தொடர்பில் எங்களுக்கும் விமர்சனம் உள்ள போதிலும், இத்தருணத்தில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து அவதானிக்க வேண்டியது முக்கியமென நாம் நினைக்கிறோம். இந்த நேரத்தில் தொற்று நோயை ஒழிப்பதற்கான செயலணியொன்றை அமைப்பது அவசியமாகும். அத்தகையதொரு செயலஅணி தொற்று நோய் சம்பந்தமான விசேட நிபுணர்களின் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அத்தகைய அணியில் கடமைப் பொறுப்புகளில் துணை அணியாக இராணுவத்தை இணைத்துக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் தொற்று நோயை எதிர்கொள்ளும் செயலணியை ஆரம்ப மணித்தியாலத்திலேயே இராணுவத் தளபதியின் தலைமையில் அரசாங்கம் அமைத்தது. சுகாதாரத் துறைகளை விடவும் இராணுவத்தை முதன்மையாகக் கொண்ட மிலிடரி கண்ணோட்டத்தில் அரசாங்கம் ஏற்கனவே செயற்பட்டு வருகிறது. இதில் சாதகமாதும், பாதகமானதுமான விளைவுகளை சமூகம் என்ற வகையில் நாம் அனுபவித்து வருகிறோம்.

கொரோனா நோய் தொற்றிய பலரோடு உறவுகளை வைத்திருந்தவர்களை வௌிப்படுத்த முடிந்தமை சாதகமான ஒரு நடவடிக்கையாகும். ஆனால் இராணுவக் கண்ணோட்டத்தில் மிகக் கடுமையான புறக்கணிப்பு என்பது வெகுஜன பங்கேற்புக்கான அலட்சியமாகும். இராணுவக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதில் சுகாதாரத் துறையின் கவனமும் ஓரளவிற்கு குறைந்துவிட்டது.இந்த நேரத்தில் மிகவும் ஆபத்தான தலையீடுகளைக் கையாளும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு போதுமான பாதுகாப்புகள் மற்றும் தேவையான வசதிகள் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ராகம மற்று தேசிய வைத்தியசாலைகளில் இரு வாட்டுகளின் அலுவலர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. மாத்திரமல்ல, சுகாதார அலுவலர்களுக்குத தேவையான பாதுகாப்பு ஆடைகள், போக்குவரத்து சேவைகள், தங்குமிடம், பொருட்களை விலைக்கு வாங்குவதில் முன்னுரிமை ஆகியன இதுவரை முறைப்படி கிடைக்கவில்லை.

ஊரடங்கு உத்தரவின் நோக்கம் பொதுக்கூட்டத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும், ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய உணவு மற்றும் பிற பொருட்களை வாங்க சில மணிநேரங்கள் வழங்கப்பட்ட போதிலும்  சரியான திட்டமிடலுடன் வழங்கப்பட்டதா என்பதுதான் கேள்வி.  திட்டமிடல் இல்லாமல் இந்தளவு நேரம் வழங்ப்பட்டதனால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்தை நேற்றும் இன்றும் நாம் கண்டோம். இதில் மக்கள் மீது எந்த குற்றமும் கிடையாது.

இன்றைய நிலையில் மக்கள் வியாபார நிலையங்களுக்கு பெருக்கெடுக்கும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மேல் மாகாணத்தை தொற்று நோய் அதிகமாகக் காணப்படும் மாகாணமாக அறிவித்து ஊரடங்கு சட்டத்தை காலவறையறையின்றி நீடித்துள்ளது. இந்த நிலையில் எப்படியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? விசேடமாக அதிக ஆபத்தான பிராந்தியமாக குறிப்பிடப்பட்டுள்ள மேல் மாகாணத்திலும், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஏனைய மாகாணங்களிலும் மக்கள் கூட்டமாக திரளாமல் அத்தியாவசியப் பொருட்களை வாங்ககங் கூடிய முறையொன்று அவசியமாகும். அதேபோன்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஒரு திட்டமும்  தேவை. இதில் தோட்டப்பகுதி மக்களும், அன்றாடம் உழைத்து வாழும் மக்களும் உள்ளடக்கப்பட வேண்டும். இதனை சமுர்த்தி பெறுநர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் நோயாளிகள் தங்கள் மருத்துவ அறிக்கைகள் மற்றும் நோய் அறிக்கைகளை மருந்தகங்கள் மற்றும் உள்ளூர் மருத்துவமனைகளில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவது ஒரு சிக்கலான பணியாகும். அந்த பணயை பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்படைக்க முடியாது. மக்களின் பங்கேற்பு தேவைப்படுகிறது.  சி.டபிள்யு.இ, கூட்டுறவு, பிரதேச செயலகங்கள், உள்ளூர் அதிகாரிகள், கிராம அதிகாரிகள் , அபிவிருத்தி அதிகாரிகள், காவல்துறை, பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார அதிகாரிகள் ஆகிய மக்கள்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைத்து பொது நிறுவனங்களையும் அதிகாரிகளையும் செயற்பாட்டிற்கு இணைத்துக் கொள்வது முக்கியம். எனினும், அது போதாது. இந்த அமைப்பில் சமூக அமைப்புகளை இணைப்பது மிக முக்கியம். அதுவும் போதுமானதாக இல்லை.  உதாரணமாக, கிராம ரீதியிலான விவசாய அமைப்புகள்  மற்று முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று நாட்டின் பலம் பொருந்தி சமூகமான இளைய சமுதாயத்தை கட்டாயமாக இணைத்துக் கொள்ள வேண்டும். இளைஞர் சங்கங்கள், விளையாட்டுச் சங்கங்கள், வாலிப சங்கங்கள் மற்றும் தொண்டரடிப்படையில் இணைய விரும்பும் இளைஞர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதன்போது, தமது ஊர்களுக்கு வந்துள்ள பல்கலைக் கழக மாணவர்களினது தன்னார்வ உழைப்பை பெற்றுக் கொள்வதும்  இத்தருணத்தில் முக்கியமாகும். ஆசிரியர்கள் போன்ற தொழில் புரிவோரையும்  தேவையெனில் இணைத்துக் கொள்ள முடியும்.

சிக்கலான நிலையிலுள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் செயற்பாட்டிற்கு இத்தகையவர்களை தன்னார்வ அடிப்படையில் இணைத்துக் கொள்ள முடியாதா? அவசியமானால், சுகாதார சேவையின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை நிலையங்களுக்கு வர முடியாத நோயாளர்களுக்கு மருந்துகளை விநியோகிக்கவும் முடியும். இதனையும் தாண்டி மக்கள் பங்கேற்பு கட்டமைப்பை பயன்படுத்தி நகரங்கள் மற்றும் பொது இடங்களில் கிரிமிநாசினி தௌித்தல் போன்ற விடயங்களையும் செய்ய முடியும். சுய விருப்பத்துடன் நன்கொடைகள் வழங்கும் அமைப்புகள் மற்றும் ஆட்களிடமிருந்து நன்கொடைகளைக் கூட, பிரதேசத்தில் கட்டமைக்கப்படும் ஒன்றிணைந்த அமைப்பின் பொறுப்பில் எடுத்து தேவைப்படும் இடங்கள் மற்றும் ஆட்களுக்கு பலனளிக்கும் வகையில் பகிர்ந்தளிக்க முடியும்.

தற்போதைய பேரழிவை எதிர்கொள்ள மக்கள் பங்கேற்பு முறையொன்றின் பால் கவனம் செலுத்துமாறும், அப்படி கவனம் செலுத்துவதாயின் இந்நாட்டு இளைய சமுதாயத்தின் தன்னார்வ பங்களிப்பை அதில் ஈடுபடுத்த நாங்களும் கூடியளவு தலையீடு செய்ய தயார் என்பதை அறியத் தருகிறோம். பிரிந்திருக்க நேர்ந்தாலும், நாங்கள் ஒன்றாக எழுவோம்! இணைந்து செயற்படுவோம்!

லஹிரு வீரசேகர,

தேசியக் குழு உறுப்பினர்

மாற்றத்திற்கான இளைஞர்கள்
Related News