Posted on 09.30.2020 by Farook in Foreign News with 0 Comments
உத்தர பிரதேசத்தில் 19 வயது இளம்பெண் மனிஷா வால்மீகி 4 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்பு உடைப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் 2 வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
15 நாள் போராட்டத்திற்கு பிறகு நேற்று அவரது இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டது.. இறந்துவிட்ட பெண்ணின் உடலைக் கூட பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் தாமாக இரவோடு இரவாக உடலை எரித்துவிட்டது காவல் துறை!!
ஏற்கனவே மகளை இழந்து நொந்து போயிருந்த குடும்பத்தை மேலும் நோகடித்துள்ளனர்.. உயர் சாதி கும்பல் மனீஷா தனக்கு ஏற்பட்ட கொடூரத்தை வெளியே சொல்லாமல் இருக்க அவரது நாவை துண்டித்து முதுகெலும்பை உடைத்தது. அவர் இறந்த பிறகு அந்த பணியை உ.பி காவல்துறை ஏற்றுக் கொண்டது.சொந்த மகளின் உடலை குடும்பத்தினர் கூட பார்க்க அனுமதிக்கவில்லை, அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் உ.பி போலீஸ் நள்ளிரவு 3 மணிக்கு மனீஷாவின் உடலை பலவந்தமாக எடுத்துச் சென்று எரித்துள்ளது.
இந்த வன்புணர்வு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. ரவி சிங்(35), ராமு சிங்(26), சந்தீப் (20) மற்றும் லவ்குஷ்(19).இவர்கள் தான் மனிஷாவை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்து கொன்றவர்கள்.