Posted on 01.13.2021 by Farook in Uncategorized with 0 Comments
உலகின் வங்கித் துறையில் ஏகபோகத்தைக் கொண்டுள்ள ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினர்களினல் ஒருவரான நதானியல் ரோத்ஸ்சைல்ட நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
49 வயதுடைய நதானியல் ரோத்ஸ்சைல்ட் பல வருடங்களாக செயற்பட்டு வரும் அவர்களது வங்கி ஏகபோக நிறுவனத்தின் அடுத்த உரிமையாளராகக் கருதப்படுபவராகும். இந்நிறுவனம் உலகின் பிரதான வங்கிகளில் பங்குதாரராக உள்ளது. அமெரிக்க வங்கிகள் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
எப்படியிருந்தாலும் இப்டிப்பட்ட உலகின் மிகப் பெரிய செல்வந்தரொருவரை இலங்கைக்கு வரவழைத்தன் ஊடாக அரசாங்கும் தற்போது எதிர்க் கொண்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து ஒரளவாவது மீண்டுவர எதிர்ப்பார்ப்பதாகத் தெரிகிறது. நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கம் திக்கு முக்காடிக் கொண்டடிருக்கிறது. ஆகவே யாருடைய காலைப் பிடித்தாவது இந்த நெருக்கடியிலிருந்து மீளத் தயாராகிறது.
கிடைக்கும் தகவல்களுக்கமைய நதானியலின் இலங்கை விஜயத்தின் போது துறைமுக நகரத்தில் 500 பில்லியன் முதலீடு சம்பந்தமாக உடன்பாட்டிற்கு வரவிருக்கிறார். தவிரவும் இலங்கையில் பிரபல விவசாயிகள் சிலரையும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.