Posted on 04.19.2022 by Farook in Top News with 0 Comments
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (18) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கு எதிராக மக்கள் பாதைகளை மூடி இன்று ஆர்ப்பாட்டத்தில் இறஙகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
றம்புக்கன பிரதேசத்தில் பிரதான பாதகளை மறைந்து வீதியிலிறங்கி மக்கள் ஆர்ப்பட்டத்தில் இறங்கியிருப்பதுடன் புகையிரதப் பாதையிலும் தடைகளை போட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரத்தினபுரி நகரிலும் சில பாதைகளை மூடப்பட்டு மக்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலி – கொழும்பு பிரதான பாதையை மறைத்து தனியார் பஸ் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருப்பதுடன், கண்டி – மஹியங்கனை பாதையில் திகன பிரதேசத்தில் பாதையை மறைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சிலாபம் – கொழுமபு பிரதான பாதை மறைத்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதேநேரம், ஹப்புத்தளை நகரிலும் மக்கள் பாதைகளை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்வதால் ஹப்புத்தளை நகரம் முடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.