Posted on 06.30.2022 by Farook in Local News with 0 Comments
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அஜித் குமார உட்பட சிலர் இன்று (30) காலை காலி கோட்டை மதில் மீது நடத்தி அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவித்தமையால் அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.
தனது எதிர்ப்பின் போது அங்கு வந்த இராணுவ வீரர்கள் தனது போராட்டத்தை தடுத்ததாகவும், அச்சுறுத்தியதாகவும், கருத்து தெரிவிக்கும் உரிமையை மீறியதாகவும், போக்கு வரத்தை தடுத்ததாகவும், அமைதியான கூட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகவும், காலி பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அஜித் குமார தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தனது உரிமை மீறல் தொடர்பாக நீதிக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.