Posted on 04.16.2022 by Farook in Local News with 0 Comments
கொழும்பு காலி முகத்திடலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஆதிவாசி மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாடு பூராவுமிருந்து வந்துள்ள இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் தொடர்ந்து 8வது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் பிக்குகள், மதகுருமார்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் உட்பட இன, மத பேதமின்றி பெருந்தொகையான பொதுமக்கள்; கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் காலிமுகத்திடலுக்கு ஆதிவாசி மக்களும் நேற்றிரவு (15) வந்துள்ளனர். நேற்றிரவு பெருந்தொகையான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.