Posted on 11.29.2020 by Farook in Local News with 0 Comments
கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் விதமாக, மரணித்த தமது உறவினர்களின் உடல்களை பொறுப்பேற்காதிருக்க சில முஸ்லிம் குடும்பங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அந்த உடல்களை தசனம் செய்வதற்காக சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
நவம்பர் 28ம் திகதி மாளிகாவத்தை பிரதேசத்தில் ஒரு நோயாளியும், கொழும்பு 2ல் இரு நோயாளிகளும் கொரோனா தொற்றினால் மரணமடைந்தமை சம்பந்தமாக அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டதன் பின்பு, அந்த உ டல்களை தகனம் செய்வதற் பணம் கொடுக்க முடியாதெனவும், தமக்க சாம்பல் தேவைப்படாது எனவும் , அந்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் எனவும் கூறிவிட்டு உறவினர்கள் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளனர்.
கோவிட் 19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது சம்பந்தமாக தன முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, ‘கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்ய இடமளிக்காமை மிகவும் மோசமான செயலாகுமெனவும். உலக சுகாதார அமைப்பும்,சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் இதனை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.